- Advertisement -
Homeபொழுதுபோக்குகிராமத்துல ஷூட்டிங் நடந்தா, அங்கிருக்கிற சிலர் என்னை பத்தி என்கிட்டயே அப்படி விமர்சனம் செய்வாங்க -...

கிராமத்துல ஷூட்டிங் நடந்தா, அங்கிருக்கிற சிலர் என்னை பத்தி என்கிட்டயே அப்படி விமர்சனம் செய்வாங்க – வெள்ளந்தியாக சொன்ன நடிகர் முரளி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் நடிகர் முரளி. குறிப்பாக கடந்த 1980களில் இருந்து 2010 வரை அவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். காதல் காமெடி சென்டிமென்ட் ஆக்சன் என எல்லாவிதமான காட்சிகளிலும் தன் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த நடிகர். ஆனால் பல படங்களில் அவர் கல்லூரி மாணவராக காதல் ஏக்கத்தில் இருப்பவராகவே நடித்திருப்பார்.

முரளி நடித்த பல படங்களில் கீதாஞ்சலி இதயம் பொற்காலம் காலமெல்லாம் காதல் வாழ்க வெற்றிக்கொடி கட்டு ஆனந்தம் சமுத்திரம் என் ஆச ராசாவே இரணியன் சுந்தரா டிராவல்ஸ் என பல படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவை. அவரது மறைவுக்கு பிறகு அவரது மகன்கள் அதர்வா, ஆகாஷ் இருவருமே சினிமாவில் இப்போது நடித்து வருகின்றனர்.

- Advertisement -

இப்போது மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா, அவரது அப்பா நடித்த சூப்பர் ஹிட் படமான இதயம் படத்தின் டைட்டிலில் இதயம் முரளி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற 2026ம் ஆண்டில் பிப்ரவரி 13ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் அதர்வா நடித்த முதல்படம் பாணா காத்தாடி, இந்த படத்தில் ஒரு காட்சியில் இதயம் முரளியாக அவர் ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

நடிகர் முரளி பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பேசியபோது கூறியதாவது, நான் வில்லேஜ் பக்கம் ஷூட்டிங் போகும்போது, ஏய் தம்பி உன்ன மாதிரி தான் இருப்பான் எங்க பக்கத்து வீட்டுக்காரன். அந்தப் பக்கம் வயக்காட்டில் இருப்பான். உன் கலரில் இருப்பான் அப்படின்னு யதார்த்தமாக என்கிட்டயே சொல்லுவாங்க.

- Advertisement -

என்கிட்டயே அவங்க அப்படி சொல்றதை நான் விமர்சனமா எடுத்துக்க மாட்டேன். அப்படி என்னை சொல்றது, அவங்க கொடுக்கிற அந்த அன்புதான் என்னை பொறுத்த வரைக்கும். கிராமத்துல இருக்கிற சராசரி மனிதர்கள் மாதிரி நானும் இருக்கிறேன்னு அவங்க சொல்றதை பார்க்கும் போது ஒரு நடிகராக மட்டும் பார்க்காமல், அவங்களில் ஒருத்தரா நெருக்கமா என்னை பார்க்கறாங்க.

ஒரு நடிகனுக்கு சம்பளம் யார் தருகிறார் என்றால் அவனைப் பார்க்கும் ரசிகர்கள்தான். பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி அவங்க படம் பார்த்து ஒரு படத்தை ஜெயிக்க வைக்கிறாங்க. அந்த படத்தோட மிகப்பெரிய சக்சஸ் தான் இன்னைக்கு நான் வீடு கார் எல்லாம் வாங்கி வசதியுடன் வாழ காரணம் என்று நடிகர் முரளி அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்