- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்போது என்னை விட நீதான் பெரிய நடிகன் - நடிகர் நாகேஷ் இப்படி சொன்னது யாரிடம்...

இப்போது என்னை விட நீதான் பெரிய நடிகன் – நடிகர் நாகேஷ் இப்படி சொன்னது யாரிடம் தெரியுமா? – அட அது சிவாஜி கணேசன் கமல்ஹாசன் இல்லைங்க…

- Advertisement -

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் பிஸியான நடிகர்களாக இருந்த காலகட்டத்தில் அவர்களை விட மிகவும் பிஸியான இருந்த நடிகர் ஒருவர் யாரென்றால் அது நாகேஷ்தான். காமெடி நடிப்பில் அந்த காலகட்டத்தில் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் படங்களில் மாறி மாறி நடித்தவர்.

எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அதில் வெளுத்து வாங்குபவர்தான் நடிகர் நாகேஷ். இன்று வரை திருவிளையாடல் தருமியை ரசிகர்களால் மறக்க முடியவில்லை. அதே போல் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி பத்மினியை விட அதிகமாக ரசிகர்களை கவர்ந்தவர் வைத்தி கேரக்டரில் நடித்த நாகேஷ்தான்.

- Advertisement -

எதிர்நீச்சல் படத்தில் மாடிப்படி மாது கேரக்டரில் நாகேஷ் நடிப்பை யாராலும் மறக்க முடியாது. மாடிப்படி மாது வந்திருக்கிறேன் என்று ஒரு காம்பவுண்டில் வீடுகளுக்கு சென்று தட்டில் உணவு வாங்கி சாப்பிடும் காட்சியில் நாகேஷ் நடிப்பு வேற லெவலில் இருக்கும். அதே போல் சர்வர் சுந்தரம் படத்திலும் சர்வராக அவரது நடிப்பில் தனித்துவமே இருக்கும்.

நடிகர் கமல்ஹாசன் இன்றும் தனது குருமார்களில் ஒருவராக நடிகர் நாகேஷ் பெயரை குறிப்பிட்டு சொல்வார். சமீபத்தில் நடிகர் நாகேஷ் குறித்து ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளராக இருந்து இப்போது குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகர் இளவரசு பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் நாகேஷூடன் நான் பேசிக்கொண்டு இருந்தேன்.

- Advertisement -

அப்போது, இறந்த கால நினைவுகள்தான் எதிர்காலத்துக்கான முதலீடு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று நாகேஷிடம் கேட்டேன். அதற்கு அவர், இல்லை இது தவறான தகவல். திருவிளையாடல் தருமி தில்லானா மோகனாம்பாள் வைத்தி போன்ற கேரக்டர்கள் என்னை எங்கேயோ கொண்டு போய்விட்டன. அதெல்லாம் முடிந்து விட்டது. இப்போது அது இறந்த காலம்.

இப்போதெல்லாம் எனக்கு வேலையே இருப்பதில்லை. மாதத்தில் 15 நாட்கள் நீ படப்பிடிப்புக்கு போய் விடுகிறாய். இப்போதைக்கு நீதான் என்னை விட பெரிய நடிகன். நான் அப்போது பெரிய நடிகனாக இருந்தேன் என்ற நினைப்பில் இப்போது இருந்தால் உன்னை மதித்து உன்னிடம் நான் பேசுவேனா? அதனால் எதுவாக இருந்தாலும் மறக்க கத்துக்கோ. மறுபடியும் இறந்த காலத்தை ஏன் பார்க்கறே? அதுதான் இறந்து போய்விட்டதே என்று இளவரசுவிடம் நாகேஷ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்