இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று 1990களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் பிரபு தேவா. நடனத்தில் அசத்தியதை போல சினிமாவில் ஹீரோவாகவும் இயக்குனராகவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் ஆதரவையும் பெற்றார். நடிப்பிலிருந்து விலகி இருந்த அவர் மீண்டும் படங்களில் இப்போது நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அடுத்ததாக பிரபுதேவா நடிப்பில் உருவான மூன்வாக், பேங் பேங் ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி படங்களில் நடித்த அவர் கடந்த 1990களில் சக்ஸஸ்ஃபுல் ஹீரோ என்ற பெயருடன் வலம் வந்தார். சூப்பர் ஹிட் படங்களான காதல் கொண்டேன் சொல்லாமலே உள்ளிட்ட பல படங்கள் முதலில் பிரபுதேவாவிடம் தான் சென்றன. ஆனால் அந்த படங்களில் அவர் நடிக்கவில்லை.
இப்படி பல இயக்குனர்களுக்கு முதல் ஆப்ஷன் ஹீரோவாக பிரபுதேவா அப்போது இருந்தவர். அதேபோல் நடனம் நடிப்பு மட்டுமின்றி டைரக்ஷனிலும் பிரபுதேவா வென்று காட்டியவர். நடிகர்கள் சித்தார்த் விஜய் சல்மான்கான் என பல நடிகர்களை வைத்து மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பிரபு தேவா.
இதற்கிடையே ரமலத் என்பவரை காதல் திருமணம் செய்து பிறகு பிரிந்துவிட்டார். நடிகை நயன்தாராவை காதலித்து பிரேக்கப் செய்தார். அதன் பிறகு இன்னொரு பெண்ணை காதலித்து 2வது திருமணம் செய்துகொண்டார் அதன்பிறகு நடிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிரபுதேவா ஒதுங்க ஆரம்பித்தார். அதன்பிறகு இப்போது தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே பிரபுதேவா நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அந்த வகையில் பிரபுதேவா நடிப்பில் அடுத்ததாக பேங் பேங் மூன்வாக் ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன. மேலும் அவர் மீண்டும் படம் டைரக்ட் செய்ய முடிவு செய்திருக்கிறார். இதற்கிடையே பிரபுதேவா குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாலிவுட்டில் அதிக படங்களில் பிரபுதேவா பணியாற்றியதால் பிரபுதேவா பல ஆண்டுகளாக மும்பையில் தங்கி இருந்தார். அதனால் தெற்கு மும்பையில் இருக்கும் மகாலட்சுமி என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மொத்தம் 2 வீடுகளை பிரபுதேவா சொந்தமாக வாங்கி இருந்தார்.
தற்போது அந்த 2 வீடுகளையும் கிட்டத்தட்ட15 கோடி ரூபாய்க்கு பிரபுதேவா விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்புதான் அதற்கான பத்திரப்பதிவு நடந்து அந்த வீடுகள் கை மாறியதாகவும் தெரிய வந்துள்ளது. மும்பையில் இருந்த வீடுகளை விற்றுவிட்டதால் இனி பிரபுதேவா சென்னையில் மீண்டும் நிரந்தரமாக குடியேறி தமிழ் படங்களில் அதிகளவில் நடிக்கவும், தமிழ் படங்களை இயக்கவும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.





