- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரதமர் மோடி குறித்து கடுமையான விமர்சித்து பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை...

பிரதமர் மோடி குறித்து கடுமையான விமர்சித்து பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பேச்சு – நடிகர் என்பதையே மறந்து விட்டாரா?

- Advertisement -

நடிகர் பிரகாஷ் ராஜ், துவக்கத்தில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்தவர். அவரது திறமையான நடிப்பை பார்த்து வியந்த கே பாலசந்தர், தனது படங்களில் நடிக்க வாய்ப்பளித்தார். ஆசை, கல்கி போன்ற படங்களில் திறம்பட்ட நடிப்பை வெளிப்படுத்திய பிரகாஷ்ராஜ், அப்பு படத்தில் திருநங்கையாக நடித்து அசத்தினார். கில்லி படத்தில் மதுரை முத்துப்பாண்டியாக வெற லெவலில் மிரட்டினார்.

தொடர்ந்து நல்ல வில்லனாக நடித்து பெயர் பெற்ற பிரகாஷ் ராஜ், ஒரு கட்டத்தில் இரட்டை நாயகர்களில் ஒருவராக நடித்தார். மொழி, மாநிறம் வயசு 60, அபியும் நானும் போன்ற படங்களில் பண்பட்ட பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தினார். கடைசியாக வாரிசு படத்தில், வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.

சமீப காலமாக அரசியல் சார்ந்த நடவடி்கைகளில் தீவிரம் காட்டி வரும் பிரகாஷ் ராஜ், பாஜக தலைமையிலான மோடி அரசை கடுமையான விமர்சனம் செய்கிறார். நேரடியாக மோடி குறித்தே பொதுவெளியில் தனது விமர்சனங்களை அச்சமின்றி வைக்கிறார். சமீபத்தில் சென்னையில், விடுதலை சிறுத்தைகள் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது.

இதில், நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற பின் பிரகாஷ் ராஜ் பேசியதாவது, உடம்பில் காயம் ஏற்பட்டால், அதை நாம் அப்படியே விட்டால் நாளடைவில் காயம் ஆறிவிடும். ஆனால் ஒரு நாட்டுக்கு காயம்பட்டால், நாம் பேசாமல் இருந்தால் அது இன்னமும் அதிகமாகி விடும். நான் இந்த மேடையில் நிற்க மக்கள்தான் காரணம். அந்த மக்களுக்கு பிரச்னை வரும்போது, கலைஞன் கோழையாகி விடக் கூடாது.

நான் எப்போதுமே மக்களின் குரலாக இருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக நான் மன்னரை எதிர்த்துக் கொண்டு இருக்கிறேன். மோடியை மன்னர் என்று சொல்ல முடியாது. அவர் தெய்வக் குழந்தை ஆகி விட்டார். இனிமேல் அவரை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. அவரால் நாட்டுக்கு துன்பம் ஏற்பட்டால் திட்ட முடியாது. தெய்வம் சோதிக்கிறது என்றுதான் சொல்ல முடியும்.

மோடி தேரில்தான் நிற்பார். விமானத்தில்தான் வருவார். மக்கள் அவரை வரவேற்று பூ போடுவார்கள். ஆனால் மக்களின் பக்கம் அவர் நிற்க மாட்டார். வேலிக்கு அந்த பக்கம்தான் மக்கள் நிற்பார்கள். மக்களின் பசியை அறியாதவர்களுக்கு மக்களை பற்றி எப்படி புரியும். இது ஒரு நிரந்தரமான போராட்டம். மீண்டும் மீண்டும் இவர்கள் வருவார்கள், போவார்கள். அவர்களை நாம் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

சற்று முன்