- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல தெலுங்கு நடிகர் கன்னத்தில் ஓங்கி அறைந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - ஷூட்டிங் ஸ்பாட்டில்...

பிரபல தெலுங்கு நடிகர் கன்னத்தில் ஓங்கி அறைந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் – ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படி ஒரு தரமான சம்பவமா?

- Advertisement -

பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டக்கத்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து ரம்மி ஹலோ நான் பேய் பேசறேன் காக்கா முட்டை திட்டம் இரண்டு பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். தெலுங்கு மலையாளம் என பிறமொழி படங்களிலும் நடிக்கிறார்.

தெலுங்கில் கடந்த மாதம் வெளியான புஷ்பா 2 மாஸ் ஹிட் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம்சரண் தயாரிப்பாளர் தில்ராஜூ கூட்டணியில் கேம் சேஞ்சர் படம் நேற்று முன்தினம் வெளியானது. படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இன்று 12ம் தேதி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் டாக்கு மகராஜ் என்ற படம் வெளியாகி உள்ளது.

- Advertisement -

வரும் ஜனவரி 14ம் தேதி நடிகர் வெங்கடேஷ் நடித்த சங்கராந்தி வஸ்துனம் என்ற தெலுங்கு படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இயக்குனர் அனில் ரவிபொடி இயக்கிய சங்கராந்தி வஸ்துனம் படத்தில் இரட்டை கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். தமிழில் சிங்கப்பூர் சலூன் தி கோட் தெலுங்கில் லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களில் மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார்.

சங்கராந்தி வஸ்துனம் படம் நாளை மறுதினம் 14ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ள நிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடத்திவரும் டாக்‌ ஷோ போலவே நடிகர் ராணா டகுபதியும் ஒரு டாக் ஷோ நடத்தி வருகிறார்.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் பிரமோஷனுக்காக சங்கராந்தி வஸ்துனம் படக்குழுவினர் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்ட நடிகர் வெங்கடேஷ் பேசும்போது இந்த படத்தில் ஒரு காட்சியில் ஐஸ்வர்யா ராஜேஷூடன் நடிக்கும் போது அவர் எனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார் என்று கூறினார். அந்த காட்சியில் அவர் என்னுடைய கன்னத்தில் மாறி மாறி அறைய வேண்டும். ஆனால் அவர் கொஞ்சம் வேகமாகவே அறைந்து விட்டார் என்றும் வருத்தப்பட்டு கூறினார்.

அதற்கு பதிலளித்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், அவரை நான் மெதுவாக தான் அறைந்தேன். உங்களுக்கு வலிக்கவில்லையா என்று கேட்டபோது, இன்னும் கொஞ்சம் வேகமாக அறை என்றார். அதன் பிறகுதான் நான் ஓங்கி அறைந்தேன் என்று கூறியிருக்கிறார். இதுவரை நீங்கள் யாரிடமாவது கன்னத்தில் அறை வாங்கி இருக்கிறீர்களா என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்க, அதற்கு நடிகர் வெங்கடேஷ் இதுதான் முதல் முறை என்றும் கூறினார்.

- Advertisement -

சற்று முன்