- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்களால் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் போச்சு, டைரக்டர் நெல்சனிடம் நேரடியாக கோபத்தை வெளிப்படுத்திய ரஜினி...

உங்களால் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் போச்சு, டைரக்டர் நெல்சனிடம் நேரடியாக கோபத்தை வெளிப்படுத்திய ரஜினி – அட இது தரமான சம்பவமா இருக்குதே?

- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் அண்ணாத்த. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. இதையடுத்து கோலமாவு கோகிலா டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஏற்கனவே கமிட் ஆகியிருந்தார். ஆனால் நெல்சன் இயக்கிய விஜய் நடித்த பீஸ்ட் படம் சரியாக போகவில்லை.

அதனால் நெல்சன் இயக்கத்தில் நடிக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பம் ரஜினிக்கு நீடித்த நிலையில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பு தரப்பில் பீஸ்ட் விமர்சன ரீதியாக எப்படி இருந்தாலும் வசூல் ரீதியாக லாபமான படம்தான் என உறுதியளித்தனர். மேலும் ஜெயிலர் படத்தை தயாரிப்பதும் சன் பிக்சர்ஸ் தான் என்பதால் அவர்களே இப்படி சொன்னதால் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்தார்.

ரஜினியே எதிர்பார்க்காத அளவுக்கு ஜெயிலர் படம் பிளாக்பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றது. ஜெயிலர் அதிரிபுதிரி வெற்றியால் ரஜினிகாந்த் மிகவும் உற்சாகமடைந்தார். 600 கோடி ரூபாய் என்ற மகத்தான வசூல் சாதனையை கடந்ததால் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கினார்.

சமீபத்தில், ஜெயிலர் படம் உருவான கதை குறித்து இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நேர்காணல் ஒன்றில் பேசினர். அப்போது நெல்சன் கூறியதாவது, ரஜினிகாந்த் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் சொன்ன காட்சிகளை சிறப்பாக நடித்து கொடுத்து விடுவார். இயக்குனர் விருப்பம்போல நடந்துக்கொள்வார்.

ஆனால் சில நேரங்களில் காட்சிகளில் சின்ன சின்ன மாற்றங்கள் சொல்வார். அதுவும் தேவைப்பட்டால் வைத்துக்கொள்ளுங்கள், இல்லை என்றால் கட்டாயமில்லை என்பார். அதே போல் அவர் சொல்வதை செய்யாவிட்டாலும் வருத்தமோ, சங்கடமோ படமாட்டார். சில நேரங்களில் அவர் சொல்வதை நான் கேட்டு விட்டு, அது சரியாக வருமா என தெரியவில்லை சார், என்று கூறிவிடுவேன். அவர் சொன்னதை செய்ய மாட்டேன்.

இப்படி ஒருமுறை படத்தின் முக்கிய காட்சி ஒன்றில் ரஜினிகாந்த் சிறு மாற்றம் சொன்னார். எனக்கு ரொம்பவும் அது பிடித்துவிட்டது. ஓகே சார், அப்படியே செய்துவிடலாம் என்றேன், அதற்கு ஆச்சரியப்பட்ட ரஜினி, உங்களால் எனக்கு ரூ. 50 ஆயிரம் நஷ்டம் என்றார். ஏன் சார் என்று கேட்டேன். இந்த காட்சியை நான் என் மேக்கப் மேன் பானுவிடம் சொன்னேன். அவர், இதற்கு டைரக்டர் நிச்சயம் ஓகே சொல்வார் என்றார், நான் சொன்னால் அவர் ஏற்கமாட்டார். மறுத்துவிடுவார் என்றேன். ஏனென்றால் நீங்கள் அப்படி பலமுறை மறுத்துள்ளீர்கள். அதனால் அவரிடம் ரூ. 50 ஆயிரம் பந்தயம் கட்டினேன். இப்போது நீங்கள் ஓகே சொன்னதால், நான் பானுவுக்கு 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும், அதனால் 50 ஆயிரம் எனக்கு லாஸ் ஆகிவிட்டது என்று ரஜினி கூறியதை நெல்சன் ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.

சற்று முன்