- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயை தொடர்ந்து ரஜினியும் நடிப்புக்கு குட்பை சொல்லப் போகிறாரா? - விரைவில் அறிவிப்பு வெளியாக...

நடிகர் விஜயை தொடர்ந்து ரஜினியும் நடிப்புக்கு குட்பை சொல்லப் போகிறாரா? – விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு? இதற்கு முக்கிய காரணம் அதுதானாம்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வருகிற 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி இப்போது நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இருதய நோய் டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். இதயத்தில் இருந்து உடலுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்ததால், அறுவை சிகிச்சை இன்றி டிரான்ஸ் கேத்தடர் முறையில் சிகிச்சை அளித்து அந்த வீக்கத்தை குணப்படுத்தியுள்ளனர். மேலும் வயிற்று வலியால் அவதிப்பட்டு ரஜினிக்கு அடிவயிற்றில் ஸ்டண்ட் பொருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்துக்கு முதுமை காரணமாக உடல் ரீதியான சில பாதிப்புகள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஏற்கனவே அவருக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைக்கு சென்று முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதை ரஜினிகாந்த் வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் ஒவ்வொரு நாளும் சாப்பிடும் உணவு கூட டாக்டரின் அறிவுறுத்தல்படிதான் கொடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கொரோனா அறிகுறிகளுடன் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது ரஜினிகாந்த் உடல்நிலையை கருத்தில் கொண்டு, சினிமாவிலிருந்து விலக வேண்டும், நடிப்பில் இருந்து விலகி முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.

ஆனால் ரஜினிகாந்த் நடிப்பை விட்டு விலகாமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். தற்போது ரஜினிகாந்த் உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்படுவதால் தொடர்ந்து அவர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வது நல்லதல்ல. படப்பிடிப்பு காரணமாக அவருக்கு ஏற்படும் மன உளைச்சல், உடல் அலைச்சல் போன்றவை அவரது உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும் என்று டாக்டர்கள் கட்டாயமாக அறிவுறுத்தியுள்ளனர்.

அதனால் ரஜினி இப்போது நடித்துவரும் கூலி படத்துடன் சினிமாவில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது குடும்பத்தாரும் இதை வற்புறுத்தி உள்ளனர். கூலி மற்றும் ஜெயிலர் 2 படங்களுடன் ரஜினி நடிப்பை விட்டு விலக அதிக வாய்ப்புள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்று அரசியல் கட்சியை ஆரம்பித்து நடிப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதே போல் நடிகர் ரஜினியும் விரைவில் நடிப்பில் இருந்து விலகும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்