நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 15ம் தேதி உலகம் முழுவதும் ஜெயிலர் 2 படம் வெளியாக உள்ளது. கூலி படத்துக்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியாகும் அடுத்த படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஜெயிலர் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு அதன் தொடர்ச்சியாக இந்த படம் வெளியாக உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மிருணாள் மேனன் வித்யாபாலன் எஸ்ஜே சூர்யா சூரஜ் வெஞ்சரமூடு மிதுன் சக்ரவர்த்தி மோகன்லால் சிவராஜ்குமார் நமோ நாராயணா யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு சென்சார் தரப்பில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனால் பேமிலி ஆடியன்ஸ் குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் இந்த படத்தை தியேட்டரில் வந்து பார்க்கலாம். மேலும் இதுவும் கேங் ஸ்டர் கதையாக இருந்தாலும் ரஜினி நடிப்பில் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் ஹைப் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்துக்காக நடந்த பிரமோஷன் நிகழ்ச்சி சூப்பர் ஷோவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, இந்த படத்தில் முக்கியமான ஒரு மெயின் கேரக்டர் நம்ம எஸ்ஜே சூர்யா, நடிப்பு அரக்கன். நான் நிறைய படத்துல பார்த்திருக்கேன். அவர் கூட ஒர்க் பண்ணும் போது மை காட் என்ன ஒரு டெடிகேசன்? அவ்ளோ வந்து பர்பெக்சன். அப்புறம் வந்து டைரக்டர் நெல்சன் கிட்ட ஓகே வாங்கறதே பெரிய விஷயம்.
ஏன்னா அவ்வளவு சீக்கிரம் அவர் ஷாட் ஓகே சொல்லவே மாட்டார். அவர் ஓகே சொல்லிட்டா அப்பாடா என்று ஒரு சேரை வாங்கி ஓரமாக உட்கார்ந்துக்கலாம். அவர் ஓகே சொல்றார். ஆனால எஸ்ஜே சூர்யா இவர் விட மாட்டார். சார் ஒன்மோர் சார் ஒன்மோர் சார் என்று கேட்பார். நெல்சனும் சரி பண்ணுங்க சார் என்பார். இப்படியே 8 டேக்கு 10 டேக்கு 12 டேக்கா?
இல்லே சார் அங்க கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு இங்க கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு. நாமும் நிக்கறோம். ரம்யாகிருஷ்ணனும் நிக்கறாங்க. அவங்களும் நிக்கறாங்க. அட்லீஸ்ட் எனக்கு 75 வயசு ஆகுது. உட்காருங்க சார் ரிகர்சல்ல கொஞ்சம் உட்காருங்க சார் அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. நிக்க வெச்சே பெண்டு கழட்டீட்டாங்க என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.





