- Advertisement -
Homeபொழுதுபோக்குநல்லவனா எப்படி வாழறது…? - நடிகர் நம்பியார் சாமி எனக்கு சொன்ன அட்வைஸ் - வெளிப்படையாக...

நல்லவனா எப்படி வாழறது…? – நடிகர் நம்பியார் சாமி எனக்கு சொன்ன அட்வைஸ் – வெளிப்படையாக பேசிய நடிகர் ரஜினிகாந்த்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இன்று வரை வில்லன் நடிகர் என்றவுடன் பலருக்கும் நினைவுக்கு வருபவராக இருப்பவர் எம்என் நம்பியார். குறிப்பாக எம்ஜிஆர் படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பெரிய அளவில் கவனம் பெற்றவர். வில்லனாக மட்டுமின்றி குணச்சித்திர நடிப்பிலும் நம்பியார் அசதத்ி விடுவார்.

குறிப்பாக நடிகர் பாக்யராஜ் இயக்கிய தூறல் நின்றுபோச்சு படத்தில் குஸ்தி வாத்தியார் கேரக்டரில் நம்பியார் நடிப்பு சிறப்பாக இருக்கும். அதே போல் எஜமான் மற்றும் பாபா படங்களில் ரஜினிக்கு தாத்தாவாக நடித்திருப்பார். வின்னர் படத்தில் பிரசாந்துக்கு தாத்தாவாக நடித்திருப்பார். பூவே உனக்காக படத்தில் விஜய்க்கு தாத்தாவாக நடித்திருப்பார்.

- Advertisement -

இப்படி ஒரு கட்டத்துக்கு பிறகு நம்பியார் தாத்தா கேரக்டர்களில் நடித்து வந்தார். ரஜினியுடன் அவர் நடித்த பாபா படத்துக்கு பிறகு நம்பியார் மறைந்து விட்டார். எனினும் நம்பியாரை தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் குருசாமி என்றுதான் அழைப்பார்கள். காரணம், அவர்தான் சபரிமலை ஐயப்ப சுவாமி மலைக்கு ஆண்டுதோறும் சென்று வந்தவர்.

அத்துடன் ரஜினிகாந்த் போன்ற பல நடிகர்களை சபரிமலைக்கு அழைத்து சென்ற குருசாமியும் அவர்தான். சினிமாவில் கொடூர வில்லனாக நடித்த எம்என் நம்பியார் நிஜத்தில் மிகவும் நல்ல பண்புகளை கொண்டவர். சிறந்த மனிதர். எந்த தீய பழக்கங்களும் இல்லாதவர். குறிப்பாக ஐயப்ப சுவாமியின் தீவிரமான பக்தராக ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தவர்.

- Advertisement -

ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் நடிகர் எம்என் நம்பியார் குறித்து கூறியதாவது, ஒருமுறை நான் நம்பியார் சாமியிடம் பேசிக்கொண்டிருந்த போது, நீங்க எப்படி இவ்வளவு ஹெல்த்தியா ஆரோக்கியமா இருக்கீங்க என்று கேட்டேன். இப்படி ஹெல்த்தியா இருக்கறதுக்கு என்ன செய்யணும் என்றும் அவரிடம் கேட்டேன்.

அதுக்கு அவர் ஒண்ணே ஒண்ணுதான் சொன்னார். ஒண்ணுமே செய்ய வேண்டாம். ஹெல்த்தியா இருக்கணும் என்று மனசுல நினைச்சுட்டு இருந்தாலே போதும். நீங்க ஹெல்த்தியா ஆயிடுவீங்க என்று சொன்னார். மிகப்பெரிய வார்த்தை அது. நல்லவங்களாக இருக்க வேண்டாம். நல்லவங்களா இருக்கணும் என்று நினைச்சாலே போதும். அந்த செய்கைகள் தானாக வரும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்