- Advertisement -
Homeபொழுதுபோக்கு12 ஆண்டுகளுக்கு பின் எனக்குள் ஏற்பட்ட மாற்றம், இது ஒரு பரம ரகசியம் - ஓபன்...

12 ஆண்டுகளுக்கு பின் எனக்குள் ஏற்பட்ட மாற்றம், இது ஒரு பரம ரகசியம் – ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இப்போது 74 வயதிலும் அவர் கூலி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இளம் வயதில் இருந்தே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருக்கும் ரஜினி ஷூட்டிங் இல்லாத நாட்களில் இமயமலைக்கு சென்று விடுவது வழக்கம்.

இமயமலையில் உள்ள ஆசிரமங்களுக்கு சென்று யோகா தியானம் செய்வார். ஆன்மிக பயிற்சிகளில் ஈடுபடுவார். அங்குள்ள மலை குகைகளில் மணிக்கணக்கில் அமர்ந்து தியானம் செய்து ஆன்மீக தேடலில் ஈடுபடுவது அவரது வழக்கம். சமீபத்தில் ஜார்கண்டில் உள்ள ஒய் எஸ் எஸ் ராஞ்சி ஆசிரமத்துக்கு ரஜினிகாந்த் சென்றார்.

- Advertisement -

அந்த ஆசிரமத்தில் ஒரு வாரம் ரஜினிகாந்த் தங்கி இருந்தார். அப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து ரஜினிகாந்த் வீடியோ பதிவு ஒன்றை செய்துள்ளார். அதை தற்போது ராஞ்சி ஆசிரமம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது, ஒய் எஸ் எஸ் ராஞ்சி ஆசிரமத்திற்கு இதுவரை 3 முறை வந்துள்ளேன்.

பரமஹம்ச யோகானந்தாஜியின் அறையில் அமர்ந்து யோகா செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆசிரமத்துக்கு நான் வந்துள்ளேன். இனி ஆண்டுதோறும் இங்கு வந்து சுமார் ஒரு வாரம் தங்குவது என்றும் முடிவு செய்துள்ளேன்.

- Advertisement -

நான் மிகவும் வைப் ஆக இருப்பதாகவும், என்னை பார்த்தால் பாசிட்டிவ் வைப் வருகிறது என்றும் பலர் கூறுகிறார்கள். அதன் ரகசியமே நான் கிரியா யோகா பயிற்சி செய்து வருவதுதான். 2002ம் ஆண்டு முதல் கிரியா யோகாவில் ஈடுபட்டு வருகிறேன். தொடக்கத்தில் எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆனால் நான் நிறுத்தவில்லை, தொடர்ந்து அதை செய்து வருகிறேன்.

ஒரு கட்டத்தில் அதாவது 12 ஆண்டுகள் ஆன பிறகுதான் அந்த மாற்றத்தை என்னால் உணர முடிந்தது. எனக்குள் ஒரு நிம்மதி அமைதி இருந்தது. கிரியா யோகாவின் சக்தி என்பது அதை தெரிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே நன்றாக தெரியும். இது ஒரு பரம்பர ரகசியம். இது எல்லோருக்குமே பயன்பட வேண்டும். நல்ல குருவை நாம் தேடி கண்டுபிடித்து விட்டால் பிறகு அவர்களை நாம் விட்டாலும் அவர்கள் நம்மை விட மாட்டார்கள் என்று அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்