நடிகர் ரஞ்சித் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகராக இருந்து வருகிறார். பல நல்ல படங்களில் அவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இப்போது பொது நிகழ்ச்சிகளிலும் அவர் ஆர்வமாக கலந்துக்கொள்கிறார்.இப்போது குழந்தை கேர் ஆப் கவுண்டம்பாளையம் என்ற படத்தை அவரே டைரக்ட் செய்து நடித்துள்ளார்.
கடந்த 1990களில் நடிகர் ரஞ்சித் நடித்த முதல்படம் பொன்விலங்கு வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து மைனர் மாப்பிள்ளை, பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி, தேசிய கீதம், நேசம் புதுசு, பசுபதி மே/பா ராசக்காபாளைம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, நடிகர் ரஞ்சித் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
தமிழ் சினிமாவில் மிக யதார்த்தமான நடிப்பை தரும் நடிகர்களின் ரஞ்சித் முக்கியமானவர். அவரது நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துவார். அதனால் ரஞ்சித் படங்களை ரசிகர்கள் விரும்புவர். பீஷ்மர் என்ற படத்தை தயாரித்து, அதில் பலத்த நஷ்டத்தை சந்தித்தவர் நடிகர் ரஞ்சித்.
நடிகர் ரஞ்சித் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே சொந்தமாக படம் எடுத்து தோல்வியை சந்தித்த நிலையில், மீண்டும் இப்போது குழந்தை கேர்ஆப் கவுண்டம்பாளையம் என்ற படத்தை அவரே டைரக்ட் செய்து நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த மாதத்தில் வெளியானது. இந்த படம் வெற்றி பெற்றால், ரஞ்சித் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார்.
இந்நிலையில் திருப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஞ்சித் கூறியதாவது, இன்றைய இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் லைக்குக்காகவும், பணம் சம்பாதிக்கவும் கண்டதையும் ஷேர் செய்து வருகின்றனர். இப்போது இருக்கிற பசங்கள், செல்போனில் ஆபாச படங்கள் பார்த்து கெட்டுப் போகின்றனர்.
அவர்களால் 10 நிமிஷம் கூட செல்போன் இல்லாமல் இருக்க முடியாது. கையில் போன் இல்லை என்றால் அவர்களது கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விடுகிறது. குழந்தைகள் ஆசைப்பட்டு கேட்கிறார்கள் என்பதற்காக, பெற்றோர் கஷ்டப்பட்டு போனை வாங்கி தந்து விடுகின்றனர். ஆனால் அதை அவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். பிள்ளைகள் கெட்டுப் போக, பெற்றோர்களே காரணமாகி விடுகின்றனர். அப்படி அவர்கள் போன் வாங்கித் தரக்கூடாது என்று கூறினார்.





