- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தை போல இதையும் வெளிப்படையாக சொல்ல வேண்டியதுதானே? - பாடகி சின்மயி பற்றி ஆவேசமாக...

அந்த விஷயத்தை போல இதையும் வெளிப்படையாக சொல்ல வேண்டியதுதானே? – பாடகி சின்மயி பற்றி ஆவேசமாக பேசிய நடிகர் ரஞ்சித்!

- Advertisement -

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான படம் திரௌபதி. இப்போது அந்த படத்தின் 2ம் பாகம் திரௌபதி 2 என்ற பெயரில் வெளிவர உள்ளது. இந்த சூழலில் அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பாடிய பாடகி சின்மயி, அந்த பாடலை நான் தெரியாமல் பாடிவிட்டேன் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து குறித்து பாலியல் குற்றச்சாட்டு குறித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பல ஆண்டுகளாக அவர் தமிழ் சினிமாவில் பாட அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பின்னணி குரல் கலைஞராக உள்ள அவருக்கு டப்பிங் பேசவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் அவர் தக்லைஃப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் பாடி பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். இதையடுத்து அவருக்கு மீண்டும் தமிழ் சினிமாவில் பாடல்களை பாட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ள நிலையில் அவர் இப்படி ஒரு சர்ச்சையை கிளப்பி விட்டிருப்பது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள திருமுருகன்பூண்டியில் மராத்தான் ஓட்டப் போட்டி என்று நடந்தது இதில் நடிகர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது, கலைஞர்களுக்கு மதமுமோ ஜாதியோ கிடையாது. அவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள்.

- Advertisement -

மத்திய அரசின் சென்சார் போர்டு மூலமாக தணிக்கை செய்யப்பட்டு அங்கீரிக்கப்பட்ட ஒரு படத்தில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட பாடலின் அர்த்தம் தெரிந்து பாடிவிட்டு தற்போது பாடகி சின்மயி அதுகுறித்து விமர்சித்து பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. திரௌபதி 2 படத்தின் கதையை நான் கேட்டுள்ளேன். மிகவும் நல்ல கதை.பிளவுபடுத்தப்பட்டு இருக்கிற மக்களை இணைப்பதற்கான ஒரு கதையாக தான் நான் பார்க்கிறேன்.

இது போன்ற ஒரு கதைக்கு பாடலை பாடிவிட்டு எந்த விஷயத்திற்காக சின்மயி இதை எதிர்த்திருக்கிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடந்த காலங்களில் தனக்கு நடந்தவற்றை பகிரங்கமாக பேசியவர் பாடகி சின்மயி. அதே போல் இந்த பாடல் பாடிய விவகாரத்தில் தனக்கு என்ன அழுத்தம் ஏற்பட்டது என்பது குறித்து விரைவில் பகிரங்கமாக சொல்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நடிகர் ரஞ்சித் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்