- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி வாழ்ந்த நான் இப்போ இப்படி வாழ்ந்துட்டு இருக்கேன்… வெளிப்படையாக விழா மேடையில் பேசிய நடிகர்...

அப்படி வாழ்ந்த நான் இப்போ இப்படி வாழ்ந்துட்டு இருக்கேன்… வெளிப்படையாக விழா மேடையில் பேசிய நடிகர் ரவிமோகன்!

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி இப்போது தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டு இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக ரவி மோகன் நடித்த படங்கள் எதுவும் பெரிய வரவேற்பை வெற்றியை பெறவில்லை. குறிப்பாக இறைவன் அகிலன் சைரன் 108 பிரதர் காதலிக்க நேரமில்லை என தொடர்ந்து படங்கள் பிளாப் ஆகி அவருக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தன.

இப்போது நடிகர் ரவி மோகன் ஜீனி கராத்தே பாபு பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் பராசக்தி படத்தில் ரவி மோகன் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். நிச்சயமாக இந்த படங்கள் ரவி மோகனுக்கு நல்ல படங்களாக வெற்றியை தரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

அதுமட்டுமின்றி நடிகர் ரவி மோகன் இப்போது இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ஒரு படத்தை, ரவி மோகன் டைரக்ட் செய்கிறார். இதில் கதாநாயகனாக யோகிபாபு நடிக்கிறார்.

அத்துடன் தனது ரவி மோகன் ஸ்டுடியோ என சொந்த நிறுவனம் துவங்கிய நடிகர் ரவி மோகன் அவரது நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ரவி மோகன் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் எஸ்ஜே சூர்யாவும் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். இதற்கிடையே நடிகர் ரவி மோகன் தனது மனைவியை பிரிந்திருக்கிறார். அவர்களது விவாகரத்து வழக்கு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் இப்போது நடந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் ரவிமோகன் பாடகி கெனிஷாவுடன் நெருக்கமான நட்பில் இருந்து வருவதும் சமீபத்தில் இந்த விவகாரம் இணையத்தில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் ரவி மோகன் இப்போது மும்பையில் இருக்கிறார். அங்கு அவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மும்பையில் இருந்து சென்னைக்கு அவ்வப்போது ரவிமோகன் விமானத்தில் வந்து செல்கிறார்.

நேற்று நடிகர் ரவி மோகன், 3 பி ஹெச் கே படத்தின் பிரமோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் மேடையில் பேசுகையில், நான் பிறந்தது முதல் சொந்த வீட்டில்தான் வாழ்ந்து வந்தேன். ஆனால் இப்போது வாடகை வீட்டில் இருக்கிறேன் என்று பேசியிருக்கிறார். ஏனென்றால் இந்த 3 பி ஹெச் கே படம் வாடகை வீட்டில் வாழ்பவர்களின் பிரச்னைகளை பற்றிய கதைக்களத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்