தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளாக போராடி இன்று மொத ராத்திரி படம் மூலம் ரசிகர்களின் பார்வைக்கு வந்திருப்பவர் நடிகர் ரிஷிகாந்த். இவர் ஏற்கனவே தமிழில் பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்திலும் கூட ரிஷிகாந்த் சில காட்சிகளில் நடித்துள்ளார்.
ஆனால் பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்களில் நடித்த போதும் ரிஷிகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை பெற முடியாத நிலையில் 15 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு மொத ராத்திரி படம் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து டோரதி படத்திலும் அவருக்கு நல்ல ஒரு அங்கீகாரம் ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற மொத ராத்திரி பட நாயகன் நடிகர் ரிஷிகாந்த் கூறியதாவது, என் வாழ்க்கையில் எப்போதுமே மேஜிக் நடந்திருக்கிறது. ஒரு விஷயம் முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைக்கும் போது அடுத்து அது ஸ்டார்ட் ஆகி விடும். மீண்டும் என்னை சினிமாவுக்குள் கொண்டு வந்து இழுத்து விட்டுடும்.
அப்படிதான் மொத ராத்திரி படத்திலும் நடந்தது. அந்த படத்தில் நடிக்க எனக்கு முதலில் ஆர்வம் இல்லை. வேறு யாரையாவது ஹீரோவா வைத்து பண்ணிக்கோ என்றுதான் இயக்குனர் ராஜா கருப்பசாமியிடம் சொன்னேன். ஆனால் அவன், வேற ஹீரோ என்றால் வேறு கதை செய்துக்கொள்கிறேன். இந்த கதைக்கு நீங்க தான் ஹீரோ என்று சொல்லி நடிக்க வைத்தான்.
இன்றைய ரசிகர்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர். ஆடியன்ஸை யாராவது முட்டாள் என்று நினைத்தால் அப்படி நினைக்கிற அவர்கள்தான் முட்டாள். அதை நான் 100 சதவீதம் சொல்றேன். நான் நிறைய ஊர்களுக்கு தியேட்டர் விசிட் போனேன். ரசிகர்களை நேரடியாக சந்திச்சேன்.
அப்போ அவங்க எனக்கு நிறைய கிளாரிட்டி கொடுத்தாங்க. ரசிகர்கள் ரொம்ப தெளிவா பேசறாங்க. எல்லோரும் சுத்தி சுத்தி சொல்றது என்ன என்றால் படத்தில் கண்டென்ட் நன்றாக இருக்க வேண்டும். கண்டென்தான் ஹீரோ. அது மட்டும் ரசிகர்களை படத்தை ரசிக்க வைக்கிறது என்று நடிகர் ரிஷிகாந்த் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





