- Advertisement -
Homeபொழுதுபோக்குமூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கும் சுந்தர் சி குறித்து பேசிய நடிகர் ஆர்ஜே பாலாஜி...

மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கும் சுந்தர் சி குறித்து பேசிய நடிகர் ஆர்ஜே பாலாஜி – இந்த படத்தை அவர் இயக்காததற்கு காரணம் இதுதானாம்!

- Advertisement -

கடந்த 2022ம் ஆண்டில் இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி ஜர்னலிஸ்ட் ஆக நடித்திருந்தார். மூக்குத்தி அம்மன் கேரக்டரில் கதையின் நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். போலி சாமியார் நிலம் ஆக்கிரமிப்பை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படம் இருந்தது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்து இருந்தார். மூக்குத்தி அம்மன் கேரக்டரில் நயன்தாரா நடிப்பு வேற லெவலில் இருந்த நிலையில் இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்போது சுந்தர் சி இயக்கத்தில் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் இந்த படம் பிரமாண்டமாக 2ம் பாகமாக உருவாகிறது.

- Advertisement -

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை தயாரிக்கிறார். இதில் சுந்தர் சி சம்பளம் ரூ. 20 கோடி, நயன்தாரா சம்பளம் ரூ. 10 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. ரெஜினா கசாண்ட்ரா துனியா விஜய் அபிநயா இனியா யோகிபாபு கருடன் ராம் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்காமல், சுந்தர் சி இயக்குவது ஏன் என்ற கேள்வி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே நேரத்தில் அவர் சூர்யா நடிக்கும் அவரது 45வது படத்தை இயக்கி வருகிறார் என்பதும் அதில் அய்யனார் கேரக்டரில் சூர்யா நடிப்பதால், இதுவும் ஒரு கடவுள் பக்தி சார்ந்த படம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கிடையே மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, மூக்குத்தி அம்மன் படம் வெளியாகி பெரிய வெற்றியை வரவேற்பை பெற்றது. அதனால் அந்த படத்தின் 2ம் பாகத்தை எப்படி உருவாக்குவது என தயாரிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எனக்கு மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் குறித்த எந்த ஒரு ஐடியாவும் இல்லை.

என்னுடைய எண்ணங்கள் எல்லாம் வேறு கதைகளில், வேறு படங்களில் தான் இருந்தன. என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் சுந்தர் சியே இப்போது மூக்குத்தி அம்மன் படத்தின் 2ம் பாகத்தை இயக்குகிறார் என்பது மிகவும் சரியான விஷயம். இதை அவரிடமே நானும் நேரடியாக கூறினேன் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்