- Advertisement -
Homeபொழுதுபோக்குமதராஸி படத்தை இயக்கிய டைரக்டர் ஏஆர் முருகதாஸ் மீது தயாரிப்பு சங்கத்தில் புகார்? - இத்தனை...

மதராஸி படத்தை இயக்கிய டைரக்டர் ஏஆர் முருகதாஸ் மீது தயாரிப்பு சங்கத்தில் புகார்? – இத்தனை கோடிகள் நஷ்டத்துக்கு அவர்தான் காரணமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் தீனா என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏஆர் முருகதாஸ். தொடர்ந்து கஜினி ரமணா கத்தி துப்பாக்கி சர்கார் தர்பார் என பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்தார். இந்தியில் சல்மான்கான் அமீர்கான் போன்றவர்களை வைத்து படம் இயக்கியவர்.

இந்நிலையில் மதராஸி திரைப்படத்தால் பலத்த இழப்பு ஏற்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தின் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மீது தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மதராஸி படம் கடந்த 2025ம் ஆண்டில் வெளியானது. இந்த படம் மொத்தமாக 60 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் நடித்திருந்தார்.

அதனால் மதராஸி படத்தில் ஆக்சன் காட்சிகள் நன்றாக இருந்தாலும் கதையில் பல சொதப்பல்கள் இருந்ததால் எதிர்பார்த்த வெற்றியை படம் பெறவில்லை. இந்நிலையில் மதராஸி படத்தை 110 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்து தருவதாக கூறிவிட்டு 170 கோடி ரூபாய் வரை கூடுதல் தயாரிப்பு செலவு வைத்து விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீ லட்சுமி பிரசாத் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதில் படத்தின் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் புகார் அளித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த புகாரில் மதராஸி படத்தில் ஏற்பட்ட இழப்புக்கு நஷ்ட ஈடாக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூபாய் 10 கோடி வழங்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் அதற்கு பதிலாக ரமணா 2ம் பாகத்துக்கான தெலுங்கு வடிவம் திரைப்படத்திற்கு கதை திரைக்கதையை எழுதி அதன் உரிமையை தங்களுக்கு தர வேண்டும் என்றும் அதில் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரமணா படம் விஜயகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மாபெரும் வெற்றிப் படமாகும்.

- Advertisement -

சற்று முன்