நடிகர் கமல்ஹாசன், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை 35 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் அவர் நடிக்கும் படங்களையும் தயாரிக்கிறார். அதே போல் மற்ற நடிகர்கள் நடிக்கும் பிற இயக்குநர்களின் படங்களையும் தயாரிக்கிறார்.
அதே போல் நல்ல நடிகர், நல்ல இயக்குநர் என்றால், அவர்களுக்காக ரிஸ்க் எடுக்கவும் கமல் தயங்க மாட்டார். உதாரணமாக 1980களின் பிற்பகுதியில் நடிகர் சத்யராஜ் வில்லனாக நடித்துக்கொண்டு இருந்தார். அவரது நடிப்பில் அபார நம்பிக்கை கொண்ட கமல், கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்தை சத்யராஜை கதாநாயகனாக வைத்து அந்த காலத்திலேயே தயாரித்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இப்போதும் கமல்ஹாசன் சிவகார்த்திகேயனை ஹீரோவை வைத்த அமரன் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ராணுவ வீரன் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த 16ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக கூறி, சில அமைப்புகள் போராட்டங்களை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் அவரது 48வது படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இம்மாதம் 2ம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. சிம்பு இரட்டை வேடங்களில் கதாநாயகன், வில்லன் என இந்த படத்தில் நடிக்கிறார்.
சமீபமாக கமல் நிறைய படங்களில் கமிட் ஆகி நடிக்கிறார். ஒரு படத்துக்கு ரூ. 150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் முன்பெல்லாம் சம்பாதித்த பணத்தை எல்லாம், சினிமாவிலேயே முதலீடு செய்து நஷ்டமடைவார். இப்போதும் நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பாதித்தும் பணத்தை அப்படி வீணாக்க கூடாது என்று அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் இருவரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சமீபத்தில் சுகாசினி, அனுஹாசன் ஆகியோரது முன்னிலையில் கமலுடன் பேச்சு வார்த்தை நடத்திய மகள்கள் இருவரும், அப்பாவுக்கு இதை ஆர்டராக போட்டு விட, கமலும் ஓகே சொல்லி விட்டார்.
இந்நிலையில் எஸ்டிஆர் 48 படம் தயாரிப்பு குறித்து கமல்ஹாசனின் இளைய மகள் நடிகை அக்ஷரா ஹாசன், தனது அப்பாவிடம் பேசியிருக்கிறார். சிம்பு, அதிக ஆடிட்யூட் கொண்டவர். ஷூட்டிங் சரியாக வரமாட்டார். நடிப்பிலும் போதிய ஆர்வம் காட்டாத நடிகர். அவரால் ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக அவரது படங்கள் சரியாக ஓடுவதில்லை. அவரை நம்பி 100 கோடி ரூபாய் முதலீடு செய்கிறீர்களே, அதை திரும்ப எடுக்க முடியுமா, இந்த படம் வேண்டாம் என்று கூறியதாக தெரிய வந்துள்ளது. அதனால் கமல் என்ன முடிவெடுப்பார் என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.





