- Advertisement -
டோரதி படம் குறித்து நடிகர் சனந்த் கூறியதாவது, தியான நிலை மாதிரி சுப்பு கேரக்டரை மனதில் நிறுத்திக் கொண்டேன். கார்த்திக் சுப்பராஜ் என் மீது வைத்திருந்த நம்பிக்கை மேலானது. அதை சிதைத்து விடக்கூடாது என்பதில் உறுதிப்பட இருந்தேன். உண்மையைச் சொன்னால் இந்த பாத்திரம் எனக்கு பெரும் ஆசீர்வாதம். மக்கள் என் திருநங்கை கேரக்டரை அதன் அழகோடு ஏற்றுக் கொண்டால் போதும் என்று நினைத்தேன். நடிக்கும் போதே மனதளவில் பதைபதைக்காக இருந்தது. பாதி படம்தான் நான் நடித்த மாதிரி இருந்தது. மீதி எல்லாம் என்னை கொண்டு போய் யாரோ செலுத்திய மாதிரி இருந்தது என்று நடிகர் சனந்த் கூறியிருக்கிறார்.





