சினிமா நடிகர்களில் பெரும்பாலானவர்கள் திரையில் ஹீரோக்களாக இருப்பார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர்கள் ஜீரோக்களாக இருப்பார்கள். அவர்கள் நடிக்கும் கேரக்டர்களுக்கும் நிஜ வாழ்க்கையில் அவர்களது உண்மையான முகத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். மேடைகளில் பேசும்போது தனது ரசிகர்கள்தான் தனது உயிர் என்று சொல்லும் சில நடிகர்கள், வீட்டுக்கு அவர்களைப் பார்க்க ஆர்வமாக செல்லும் ரசிகர்களை காம்பவுண்ட் கேட்டுக்குள் கூட அனுமதிக்க மாட்டார்கள்.
வெகு தொலைவில் இருந்து தன்னை பார்க்க வந்த அன்பான ரசிகர்களுக்கு முகத்தை கூட காட்ட மாட்டார்கள். ஆனால் ஒரு சில நடிகர்கள் சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் உண்மையான ஹீரோக்களாக வாழ்ந்திருக்கின்றனர். அந்த வரிசையில் எம்ஜிஆர் விஜயகாந்த் கே பாக்யராஜ் போன்றவர்களை குறிப்பிட்டு சொல்லலாம். அதிலும் சுப்ரீம் ஸ்டார் நடிகர் சரத்குமார் ஒரு சூப்பர் ஹீரோ என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
குறிப்பாக திரையுலகை சார்ந்த பெரிய நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் மறைந்து விட்டால், அவர்களது வீட்டுக்கு பல நடிகர் நடிகைகள் வந்து துக்கம் விசாரித்துவிட்டு உடனே சென்று விடுவார்கள். ஆனால் நடிகர் சரத்குமாரை பொறுத்தவரை அது போன்ற துக்க வீடுகளுக்கு வந்தால் மணிக்கணக்கில் அங்கேயே இருப்பார். தேவைப்பட்டால் நாள் முழுவதும் இருந்து அங்கே நடக்கும் விஷயங்களில் அவரால் முடிந்த உதவிகளை செய்வார். தேவையான ஆலோசனைகள் சொல்லுவார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு இயக்குனர் கே பாக்யராஜ் மறைவின்போது தனது மனைவி ராதிகாவுடன் அங்கு வந்த நடிகர் சரத்குமார் இரண்டு நாட்களாக அங்கேயே இருந்தார். பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்த பார்த்திபனும் அங்கேயே இருந்து சகல வேலைகளையும் கவனித்துக் கொண்டார். இறுதியில் பாக்யராஜின் உடலை வீட்டுக்குள் இருந்து இறுதி ஊர்வலம் செல்ல வேனுக்கு பார்த்திபனும் சரத்குமாரும் தான் தோளில் வைத்து சுமந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த அளவுக்கு சரத்குமார் அதுபோன்ற துக்க வீடுகளில் தன்னால் இயன்ற உதவிகளை செய்வது வழக்கமாக உள்ளது. அத்துடன் ரஜினிகாந்த் போன்ற மூத்த நடிகர்கள் வரும்போது அவர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்று திரும்பவும் அவர்கள் காரில் ஏறும் வரை உதவும் குணம் கொண்டவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். பெரிய நட்சத்திர நடிகர் பணக்காரரா்தான் சரத்குமார். ஆனால் இந்த அவரது உதவும் குணம் பலருக்கும் வருவதில்லை.
கடந்த காலத்தில் விஜயகாந்த் சரத்குமார் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளாக இருந்தபோது எப்படி செயல்பட்டார்களோ அதேபோல் தான் இப்போதும் சரத்குமார் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இல்லாவிட்டாலும் இதுபோன்ற உதவிகளை தானே முன்வந்து செய்கிறார். தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளாக இருக்கும் நாசர் விஷால் கார்த்தி போன்றவர்கள் இப்படி எல்லாம் அக்கறையாக நடந்து கொள்வதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.





