- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் நடிச்ச படமும்தான் வரலே… அதுக்கு யாராச்சும் குரல் கொடுத்தாங்களா? நடிகர் சரத்குமார் ஆவேசம்!

நான் நடிச்ச படமும்தான் வரலே… அதுக்கு யாராச்சும் குரல் கொடுத்தாங்களா? நடிகர் சரத்குமார் ஆவேசம்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் கடந்த 9ம் தேதி வெளியாகவில்லை. இதுகுறித்து ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவின் விசாரணை நாளை எடுத்துக்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ஜனநாயகன் படம் சென்சார் பிரச்னையில் சிக்கியது குறித்து திரை பிரபலங்களும் பலரும் சென்சார் போர்டு அநீதியாக நடந்துக்கொள்வதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது மத்திய அரசின் அழுத்தம் காரணமாக ஒரு திரைப்படத்துக்கு ஏற்படுத்திய சிக்கல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமாரிடம் ஜனநாயகம் திரைப்படம் தணிக்கை சான்று விவகாரத்தில் சென்சார் போர்டு மேல்முறையீடு செய்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து நடிகர் சரத்குமார் கூறியதாவது, சென்சார் போர்டு இப்போது மட்டும் ஒரு படத்தை நிறுத்தவில்லை.

இதற்கு முன்பு பல படங்களை இப்படி நிறுத்தி உள்ளார்கள். நான் நடித்த அடங்காதே என்ற படமும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை? இது அரசியல் சதியா? அந்த படத்தில் சொல்லப்பட்ட சில கருத்துக்கள் ஏற்புடையது அல்ல என்று சென்சாரில் முடிவெடுத்து இருக்கிறார்கள். அதனால் அந்த படம் வெளியாகவில்லை.

- Advertisement -

ஜனநாயகன் படத்தில் என்ன பிரச்னை இருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் இதை ஒரு செய்தியாக மக்களிடம் கொண்டு சேர்க்க நினைப்பது அங்கிருந்து இங்கு வந்த எனக்கு வேதனையாக இருக்கிறது. சென்சார் போர்டுக்கு நான் என்றும் குரல் கொடுத்தது கிடையாது.

மேலும் என்னுடைய அடங்காதே படத்திற்கு அனைத்து நடிகர்களையும் குரல் கொடுக்க சொல்லுங்களேன். பராசக்தி திரைப்படமும் மறு ஆய்வுக்கு சென்று தான் வந்தது என்று நடிகர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். சமத்துவ மக்கள் கட்சியை கடந்த 1996ம் ஆண்டில் துவங்கிய நடிகர் சரத்குமார் இப்போது பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்