- Advertisement -
Homeபொழுதுபோக்குடூரிஸ்ட் பேமிலி படத்துக்கு கிடைத்த அமோக வெற்றி… சம்பளத்தை உயர்த்துவாரா ஹீரோ சசிக்குமார்… - அவரே...

டூரிஸ்ட் பேமிலி படத்துக்கு கிடைத்த அமோக வெற்றி… சம்பளத்தை உயர்த்துவாரா ஹீரோ சசிக்குமார்… – அவரே தந்த ஓபன் ஸ்டேட்மென்டை பாருங்க!

- Advertisement -

நடிகர் சசிக்குமார் சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் வெளியாக திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் டூரிஸ்ட் பேமிலி. 24 வயதான இளம் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய முதல்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது.

டூரிஸ்ட் பேமிலி படம் வெளியான 12 நாட்களில் ரூ. 51 கோடிக்கு மேல் வசூலை குவித்திருக்கிறது. தொடர்ந்து தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி சனி ஞாயிறு தினங்களில் டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்த்த பேமிலி ஆடியன்ஸ் அதிகளவில் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற படத்தின் நாயகன் நடிகர் சசிக்குமார் பேசியதாவது, பல ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு இப்படி ஒரு வெற்றி கிடைத்து இருக்கிறது. இதை என்னுடைய வெற்றியாக நான் நினைக்கவில்லை. சசிகுமார் ஜெயித்து விட்டார் தயாரிப்பு நிறுவனம் ஜெயித்துவிட்டது என்று நினைக்காதீர்கள்.

புது இயக்குனர்களுக்கும் தோல்வி அடைந்த இயக்குனர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது இந்த படம் டூரிஸ்ட் பேமிலி வெளியான முதல் நாள் கிட்டதட்ட 2.5 கோடி ரூபாய்தான் வசூலித்தது. என்னுடைய ஒரு படம் மொத்தமாகவே 2.5 கோடிதான் வசூல் செய்தது. ஆக என்னுடைய ஒரு படம் ரூ. 2.5 கோடிக்கும் ஓடியிருக்கிறது. நான் நடித்த படங்களில் சுந்தர பாண்டியன், குட்டிபுலி தான் அதிக வசூல் செய்த படங்கள். ஆனால் இன்று இந்த டூரிஸ்ட் பேமிலி படம் அதனை முறியடித்து இருக்கிறது.

- Advertisement -

அதனால் இனி வருபவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுங்கள். சுந்தர பாண்டியன் படத்தில் உங்களை எல்லோருக்கும் எப்படி பிடித்ததோ அதேபோல் இந்த படத்தில் வரும் தர்மதாஸ் கேரக்டரும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொன்னார்கள். அதே போல் நான் தியேட்டருக்கு சென்று பார்த்த போது நல்ல வரவேற்பு இருந்தது. நல்ல படம் கொடுத்தால் குடும்பத்துடன் தியேட்டருக்கு மக்கள் வருவார்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.

டூரிஸ்ட் பேமிலி எங்கள் வெற்றி அல்ல; இது தமிழ் சினிமாவின் வெற்றி என்று நான் நினைக்கிறேன். இன்னும் பல குடும்ப படங்கள் வரவேண்டும். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த படம் வெற்றி அடைந்ததால் சம்பளத்தை ஏற்று விடுவீர்களா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். கண்டிப்பாக சம்பளம் ஏறாது. அதே சம்பளம் தான். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் சம்பளம் ஏத்தும் போது படத்தின் பட்ஜெட் ரொம்ப ஜாஸ்தியாகும் என்று நடிகர் சசிக்குமார் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்