- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த கேரக்டரில் நடிக்க மறுக்கும் இன்றைய சில ஹீரோக்கள், விளாசித் தள்ளிய நடிகர் சசிக்குமார்!

அந்த கேரக்டரில் நடிக்க மறுக்கும் இன்றைய சில ஹீரோக்கள், விளாசித் தள்ளிய நடிகர் சசிக்குமார்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சசிக்குமார். சினிமாவில் இருந்தும் யதார்த்தமான மனிதராக ஒரு நல்ல படைப்பாளியாக சசிக்குமார் இருந்து வருகிறார். சசிக்குமார் சிம்ரன் யோகிபாபு ரமேஷ் திலக் எம்எஸ் பாஸ்கர் குமரவேல் உள்ளிட்டோர் நடித்த படம் டூரிஸ்ட் பேமிலி, விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

டூரிஸ்ட் பேமிலி படத்தில் இரண்டு மகன்களுக்கு தந்தையாக சசிக்குமார் நடிக்கிறார். மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஆவேசம். இந்த படத்தில் நடித்த மிதுன், கமலேஷ் இருவரும் சசிகுமாரின் மகன்கள் கேரக்டரில் டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடிக்கிறார்கள்.
குடும்பத்துடன் பார்க்கும் ஒரு பேமிலி சப்ஜெக்ட் படமாக இது உள்ளது.

- Advertisement -

இந்த படம் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சசிக்குமார் கூறியதாவது,
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க முடியாமல் அங்கிருந்து வந்து சென்னையில் ஒரு ஈழத் தமிழர் குடும்பம் குடியேறுகிறது. பிறகு அந்த ஏரியாவே விரும்பும் ஒரு குடும்பமாக எப்படி மாறுகிறது என்பதுதான் டூரிஸ்ட் பேமிலி படத்தின் கதை.

ஈழத்தமிழர்கள் என்றால் அவர்கள் பட்ட கஷ்டத்தையும் வலியையும் பற்றி தான் பேசுவார்கள். இதில் அவர்கள் கஷ்டத்தை எவ்வளவு தூரம் சந்தோஷமாக மாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள் என்று இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். கதை சொல்லும் போதே 16 வயது பையனுக்கும் ஒரு சின்ன பையனுக்கும் அப்பா என்று தெரியும்.

- Advertisement -

கதையை சொல்லும்போதே தைரியமாக இருந்தேன். நிச்சயமாக இந்த கதையை இன்னொரு ஹீரோ கிட்ட சொல்ல முடியாது. இதில் நான்தான் நடிக்க வேண்டும். இப்ப இருக்குற தமிழ் சினிமாவில் 16 வயது பையனுக்கு அப்பாவாக ரெண்டு மூணு பேர் தவிர யாரும் நடிக்க மாட்டாங்க. அவங்களுக்கு 25 பையன் கூட இருப்பாங்க. இருந்தாலும் அப்பாவா நடிக்க மாட்டாங்க.

இந்த கதையும் சில ஹீரோக்களிடம் சொல்லப்பட்டு பிறகு தான் என்னிடம் வந்தது. நான் நடிக்க தயார் என்று சொன்னேன். இங்கே கதை தான் முக்கியம். சமீப காலத்தில் அழகாய் சொன்ன விதத்தில் முழு திருப்தியாக கேட்டது இந்தப் படத்தின் கதைதான் என்று நடிகர் சசிகுமார் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்