- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் கருத்துக்கு எதிராக என் மகன் சிபி பேசறது நல்ல விஷயம்தான் - விஜய் குறித்த...

என் கருத்துக்கு எதிராக என் மகன் சிபி பேசறது நல்ல விஷயம்தான் – விஜய் குறித்த விமர்சனத்தில் கடைசியில் மகனிடமே சரண்டர் ஆன நக்கல் நாயகன் சத்யராஜ்!

- Advertisement -

நடிகர் சத்யராஜ் சினிமாவில் அறிமுகமான போது தன்னை தீவிர எம்ஜிஆர் ரசிகராக காட்டிக்கொண்டார். எம்ஜிஆரை ஒருமுறை நேரில் சந்தித்த போது அவர் உடற்பயிற்சி செய்யும் கர்லா கட்டையை தனக்கு பரிசாக தந்ததாக புதியவானம் படத்தில் ஒரு காட்சியில் கூறியிருப்பார். அது உண்மையில் நடந்த சம்பவம்தான்.

ஆனால் உண்மையில் நடிகர் சத்யராஜ் திமுகவின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார். சமீபத்தில் நடந்த திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடைகளில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பேசினார். அப்போது தவெக தலைவர் நடிகர் விஜய் குறித்தும் கண்டபடி விமர்சித்து பேசினார்.

- Advertisement -

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் கடந்த ஆண்டில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தல் போட்டியிட திவ்யா சத்யராஜ் விருப்பமனு அளித்தும் அவருக்கு சீட் தராமல் திமுக தலைமை கைவிரித்து விட்டது.

இதற்கிடையே நடிகர் சத்யராஜ் அவரது மகள் திவ்யா திமுக சார்ந்தவர்களாக இருந்தாலும் சத்யராஜ் மகன் நடிகர் சிபிராஜ் தவெக தலைவர் விஜய் ஆதரவாளராக இருக்கிறார். சமீபத்தில் விஜய் குறித்த தனது தந்தை சத்யராஜ் பேச்சுக்கு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் தந்திருந்தார். இது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் பேசிய நடிகர் சத்யராஜ் கூறியதாவது, நான் விஜய் பத்தி பேசினதும் என் மகன் சிபி, அப்பாவுக்கு பதில் சொல்ற மாதிரி பதிவு எல்லாம் போடறது நல்ல விஷயம்தான். ஏன்னா நான் 12, 13 வயசுலயே எம்ஜிஆர் ரசிகன். அவர் கட்சி ஆரம்பிக்க சொல்ல எங்க குடும்பமே காங்கிரஸ் குடும்பம். வீடு முழுக்க காங்கிரஸ் கொடி தான் இருக்கும்.

ஆனால் நான் திமுக கொடியை சைக்கிள்ல கட்டிட்டு ஊரைச் சுத்துவேன். அதனால அப்பா ஓரிடம் மகன் வேறு இடம் என்று இருப்பது தப்பில்லை. இவிகேஎஸ் இளங்கோவன் அண்ணனோட அம்மா அதிமுக மந்திரி. ஆனால் அவர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சிக்கலையா? என்று சத்யராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்