- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்த 5 ஆண்டுகளுக்கு ரஜினி வைத்திருக்கும் திட்டங்கள் - இயக்குனர் ஆர்ஜே பாலாஜி சொன்ன சீக்ரெட்!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரஜினி வைத்திருக்கும் திட்டங்கள் – இயக்குனர் ஆர்ஜே பாலாஜி சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

ஆரம்பத்தில் ஆர்ஜே பாலாஜி எப்எம் ரேடியோவில் பேசிக்கொண்டு இருந்தார். அவரது நான் ஸ்டாப் பேச்சுக்கு ரசிகர்கள் உருவான நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் மாறி இன்னும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் அவர் பிரபலமானார். அதன்பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

துவக்கத்தில் நானும் ரவுடிதான் கவலை வேண்டாம் தேவி போன்ற சில படங்களில் காமெடி ரோலில் நடித்த ஆர்ஜே பாலாஜி பிறகு எல்கேஜி படத்தில் கதாநாயகனாக மாறினார். பிறகு மூக்குத்தி அம்மன் வீட்ல விசேஷம் சொர்க்க வாசல் போன்ற படங்களில் நாயகனாக நடித்தார். இப்போது சூர்யா நடிப்பில் கருப்பு என்ற படத்தை ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, கொஞ்ச நாட்களுக்கு முன்பு நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு அமைந்தது. இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் இது நடந்தது. அப்போது நான் அவரை பார்த்த போது பிரமித்து போனேன்.

நமக்கெல்லாம் தெரியும். ரஜினி சார் எவ்வளவு பெரிய மனிதர். எத்தனை ஆண்டுகளாக இந்த சினிமா துறையில் அவர் இருக்கிறார் என்பது தெரியும். அப்படி அவர் கிட்ட நான் பேசிட்டு இருக்கும்போது, அடுத்த 5 வருஷங்களுக்கு அவரோட அடுத்தடுத்த பிளான் என்ன என்பதை பற்றி என்னிடம் சொன்னார்.

- Advertisement -

என்னென்ன படம் பண்ணனும்? எப்படிப்பட்ட படம் பண்ணனும்? அடுத்த 3 4 படங்களுக்கு எந்த மாதிரியான டைரக்டர்ஸ் கிட்ட பேசியிட்டு இருக்காங்க எனறு சொன்னார். எனக்கு அது ரொம்பவும் இன்ஸ்பையரிங்காக இருந்தது. 75 வயதில் இருக்கிற ஒரு மனிதர் அவரோட அடுத்த 5 ஆண்டுகளுக்கான பிளான்களை வைத்திருக்கிறார்.

என்ன படம் பண்ணனும்? எப்படி எல்லாம் பண்ணனும் என்று 50 ஆண்டுகளுக்கு முன்னாடி சினிமாவில் எப்படி ஆர்வமாக இருந்தாரோ அதே அளவுக்கு ஆர்வமா இன்னைக்கும் அவர் இருக்கிறார் என்பதை பார்த்த போது எனக்கு அது ரொம்பவும் இன்ஸ்பையரிங்கா இருந்தது என்று ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்