- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்ணா, கட்சியில இவருக்கு முக்கிய பொறுப்பு ஏதாவது கொடுங்கணா - என்று தவெக கட்சியினர் கதறும்...

விஜய்ணா, கட்சியில இவருக்கு முக்கிய பொறுப்பு ஏதாவது கொடுங்கணா – என்று தவெக கட்சியினர் கதறும் அளவுக்கு தளபதி புகழ் பாடும் பிரபல நடிகர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். ஆனால் யாருமே எதிர்பார்க்காத ஒரு திடீர் அறிவிப்பை கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி இருப்பதாகவும், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாகவும் அவர் அறிவித்தது பெரிய ஆச்சரியத்தை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தியது.

எனினும் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்திக் காட்டிய அவர், இப்போது கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழாவிலும் பங்கேற்று பேசினார். தொடர்ந்து அரசியல் களத்தில் தன் முழுவீச்சை காட்ட தயாராகி வரும் நடிகர் விஜய், வருகிற ஜூன் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து ஒரு சில நடிகர் நடிகைகள் பட்டும் படாமலும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களது ஆதரவு விஜய்க்கு இல்லை என்பது அவர்களது வார்த்தைகளிலேயே தெளிவாக தெரிகிறது. ஆனால் நடிகர் ஷாம் தொடர்ந்து நடிகர் விஜய் குறித்து புகழ்ந்து பேசி வருகிறார். வாரிசு படத்தில் நடிகர் விஜயுடன் ஷாம் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ஷாம் கூறியதாவது, விஜய் அண்ணா அரசியலுக்கு வந்ததும் அவரை மேடையில ஒரு வாட்டி பேச சொல்லுங்க அப்படீன்னு கிண்டல் பண்ணினாங்க. அப்படி அவருக்கு தைரியமாக பேச வராது அப்படின்னு விமர்சனம் செஞ்சாங்க.

அதுக்கு அப்புறம் இப்போது பத்திரிகையாளர்களை விஜயை சந்திக்க சொல்லுங்க, பிரஸ் மீட் வைக்கச் சொல்லுங்க அப்படீன்னு சொல்றாங்க. இப்படி ஏதாவது ஒண்ணு விஜய் அண்ணா பத்தி தொடர்ந்து சொல்லிட்டு இருக்காங்க. அவர் அமைதியாக இருக்கிறார். அவ்வளவுதான்.

நம்ம ஊர்ல யாராவது கத்தி கத்தி பேசினா அவங்க பயங்கரமான ஆளுங்க என்று நம்புகிற கெட்ட பழக்கம் இருக்குது. ஆனா அப்படி கத்தி கத்தி பேசுவார்களை எல்லாம் விஜய் அண்ணாவோட நாலேட்ஜ்க்கு முன்னாடி பக்கத்துல கூட வர முடியாது. யார் யாரோ அவருக்கு அட்வைஸ் பண்ணும் போது எனக்கு காமெடியாத்தான் இருக்கும் என்று நடிகர் ஷாம் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்