- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்க தயாரான நடிகர் சிவகார்த்திகேயன்… இதற்கு தயாரிப்பாளர்களின் நெருக்கடிதான் காரணமா?

ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்க தயாரான நடிகர் சிவகார்த்திகேயன்… இதற்கு தயாரிப்பாளர்களின் நெருக்கடிதான் காரணமா?

- Advertisement -

அமரன் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து முடித்து விட்டார். அந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படம் துப்பாக்கி கஜினி ஆகிய 2 படங்களின் கலவையாக இருக்கும் என்று இயக்குனர் ஏஆர் முருகதாஸ் ஏற்கனவே கூறிவிட்டார்.

மதராஸி படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் அதர்வா வில்லன் கேரக்டரில் நடிகர் ரவிமோகன் நடித்து வருகின்றனர். நடிகை ஸ்ரீலீலா இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

- Advertisement -

இந்த படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்க வேண்டிய நடிகர் மோகன்லால் கால்ஷீட் அடுத்த ஆண்டு மார்ச் மாதம்தான் கிடைக்கும் என்பதால் அந்த படத்தை தற்காலிகமாக தள்ளி வைத்து விட்டனர்.

ஏற்கனவே அயலான் படம் ரிலீஸ் நேரத்தில் பிரச்னை ஏற்பட்ட போது 20 கோடி ரூபாய் கடன் தொகை வாங்கிய வகையில் பேஷன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் சுதனுக்கு சிவகார்த்திகேயன் ஒரு படம் நடித்து தர வேண்டும். இந்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார். அதே போல் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்குகிறார்.

- Advertisement -

இப்போது இந்த 2 நிறுவனங்கள் தயாரிக்கும் 2 படங்களிலும் நடிக்க வேண்டிய நிர்பந்தமும் நெருக்கடியும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஏற்கனவே டான் என்ற படத்தில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படம் வெற்றி அடைந்தாலும் சிபி சக்ரவர்த்தி ஆட்டிட்யூட் சிவகார்த்திகேயனுக்கு பிடிக்கவில்லை. அவருடன் பணிபுரிய விரும்பவில்லை.

இயக்குனர் சிபி சக்ரவர்த்திக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே உரசல் இருப்பதால் அவரது இயக்கத்தில் நடிப்பதையே அவர் விரும்பாத நிலையில் வேறு வழியின்றி இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனங்கள் தந்த நெருக்கடியால் வருகிற அக்டோபர் மாதம் இந்த 2 படங்களிலும் சிபி சக்ரவர்த்தி, வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தயாராகி உள்ளார்.

- Advertisement -

சற்று முன்