- Advertisement -
Homeபொழுதுபோக்குமண்டாடி படத்தை தொடர்ந்து சூரி நடிக்கும் 2 படங்கள்… நன்றியை மறக்காத நல்ல பண்பாளர் ...

மண்டாடி படத்தை தொடர்ந்து சூரி நடிக்கும் 2 படங்கள்… நன்றியை மறக்காத நல்ல பண்பாளர் – ஆனாலும் இந்த விஷப் பரீட்சை தேவையா ப்ரோ…?

- Advertisement -

நடிகர் சூரி காமெடி நடிகராக ரசிகர்களிடம் அறிமுகமானவர். இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சிதான் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. பிறகு ரஜினி விஜய் அஜீத்குமார் சூர்யா ரவிமோகன் தனுஷ் விஷால் சிவகார்த்திகேயன் என பல நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்து முன்னணி காமெடி நடிகராக மாறினார்.

காமெடி நடிகராக இருந்த சூரியை தனது விடுதலை படத்தில் கதாநாயகனாக மாற்றினார் இயக்குனர் வெற்றிமாறன். கான்ஸ்டபிள் குமரசேன் நடிப்பில் அசத்திய சூரி தொடர்ந்து கருடன் கொட்டுக்காளி மாமன் என வெற்றிப் படங்களை கொடுத்து இப்போது ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு ஹீரோவாக மாறிவிட்டார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சூரி தன்னுடன் ஆரம்பத்தில் பணிபுரிந்த இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பலரும் தன்னை அவர்களது படங்களில் கமிட் செய்ய வற்புறுத்துவதால் பலத்த நெருக்கடியில் இருப்பதாக தகவல் பரவியது. ஏனெனில் இப்போது சூரிக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் அவரை வைத்து படம் இயக்க இயக்குனர்களும் படம் தயாரிக்க தயாரிப்பாளர்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

எனினும் பழகிய நண்பர்கள் என்ற அடிப்படையில் அனைவருக்குமே வாய்ப்பு தர முடியாத ஒரு சூழலில் சூரி இருந்து வருகிறார். இதற்கிடையே தற்போது நடிகர் சூரி மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு நேற்று இன்று நாளை மற்றும் அயலான் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

- Advertisement -

அந்த படத்துக்கு பிறகு இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் ஒரு படத்திலும் நடிகர் சூரி ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் சுசீந்திரன்தான் வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் காமெடி நடிகராக சூரியை அறிமுகப்படுத்தினார். மேலும் படம் முழுவதும் சூரி கேரக்டர் வருவது போலவும் அந்த படத்தில் காட்சிகளை அமைத்து நடிகர் சூரிக்கு நல்ல அடையாளத்தை தந்திருந்தார்.

அதனால் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் சுசீந்திரனுக்கு நன்றியை மறக்காமல் அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாக நடிகர் சூரி நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த படத்தை தயாரிக்கப் போவதும் நடிகர் சூரி என்ற புதிய தகவலும் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சூரியின் நண்பர் நடிகர் சிவகார்த்திகேயன் பல படங்களை சொந்தமாக தயாரித்து பலத்த நஷ்டத்தை சந்தித்தார். அதனால் உங்களுக்கு இந்த விஷப் பரீட்சை தேவையா ப்ரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்