- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை சுவாசிகா நடிகர் பால சரவணன் குறித்து திடீர் பதிவு வெளியிட்ட நடிகர் சூரி!

நடிகை சுவாசிகா நடிகர் பால சரவணன் குறித்து திடீர் பதிவு வெளியிட்ட நடிகர் சூரி!

- Advertisement -

நடிகர் சூரி காமெடி நடிகராக இருந்த அவர் இப்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் பவனி வந்துக்கொண்டு இருக்கிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமன் படம் 42 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்திருக்கிறது. மாமன் படத்தை தொடர்ந்து மண்டாடி என்ற படத்தில் சூரி நாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் மாமன் படத்தில் நடிகர் சூரிக்கு அக்காவாக நடித்த நடிகை சுவாசிகா குறித்தும் அந்த படத்தில் காமெடி கேரக்டரில் நடித்த பால சரவணன் குறித்தும் நடிகர் சூரி தனது வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருக்கிறார். ஏற்கனவே லப்பர் பந்து பண்ணையாரும் பத்மினியும் குட்டிப்புலி டார்லிங் போன்ற படங்களில் பாலசரவணன் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நடிகர் சூரி வெளியிட்டுள்ள ஒரு பதிவில் நடிகை சுவாசிகா குறித்து கூறியிருப்பதாவது, என் அன்பும் நன்றிகளும் கிரிஜா அக்காவுக்கு. மாமன் படத்தில் உங்கள் நடிப்பு என் மனதை ஆழமாக கவர்ந்தது. அக்கா லட்டு அம்மா மகள் மனைவி என ஒவ்வொரு வேடத்திலும் நீங்கள் காட்டிய திறமை ஒளிர்ந்தது. நீங்கள் நடித்த ஒவ்வொரு காட்சிகளிலும் உண்மையான உணர்வுகள் இருந்தன.

அதுதான் இந்த படத்தின் சிறப்பு. உங்களுடன் இணைந்து நடித்தது எனக்கு நல்ல அனுபவமாகவும் போட்டியாகவும் இருந்தது. இந்திய சினிமாவுக்கு கிடைத்த அரிய செல்வம் நீங்கள். உங்களிடம் இருந்து கற்கும் இந்த பயணம் தொடரும் என்று நடிகர் சூரி நடிகை சுவாசிகாவை வெகுவாக பாராட்டி பதிவிட்டுள்ளார்.

அதேபோன்று நடிகர் பால சரவணன் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி இனி வரும் காலங்களில் எந்த கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து மிகச் சிறந்த நடிகராக உயர்வார் தம்பி பாலசரவணன்.

மாமன் படத்தில் சில காட்சிகள் மட்டுமே அவர் வந்ததாக சொன்னீர்கள். அது உண்மைதான். ஆனால் அவர் வந்த குறைந்த காட்சிகளிலும் அனைவரது மனதையும் கவர்ந்து விட்டார். இதை யாராலும் மறுக்க முடியாது. நான் தம்பி பாலாவின் மிகப்பெரிய ரசிகன். எனக்கு ஆதரவாக தூணாக அவர் இருந்தார். இன்னும் பல படங்களில் அவருடன் வேலை செய்ய வேண்டும். என் அன்பும் நன்றியும் தம்பி என பால சரவணன் குறித்தும் பதிவிட்டுள்ளார் நடிகர் சூரி.

சற்று முன்