தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு மூலம் காமெடி நடிகராக தனது பயணத்தை துவங்கிய நடிகர் சூரி இப்போது வெற்றிக்கரமான ஒரு கதாநாயகனாக பவனி வந்துக்கொண்டு இருக்கிறார். விடுதலை கருடன் படங்களின் அபார வெற்றிக்கு பிறகு சமீபத்தில் வெளியான மாமன் படமும் அவரை ஜெயிக்க வைத்திருக்கிறது. இந்த படம் ரூ. 40 கோடிக்கு மேல் வசூலை அள்ளியிருக்கிறது.
இந்நிலையில் மாமன் படம் குறித்து ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சூரி கூறியதாவது, உறவு சார்ந்த குடும்பக் கதைகளை படமாக தரும் போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கண்டிப்பாக இருக்கும். தங்கள் வாழ்க்கையில் நடந்ததை சினிமாவாக பார்க்கிற மக்கள் அந்த காலத்துக்கே சென்று விடுகின்றனர்.
அண்ணனாக தம்பியாக மாமனாக மச்சானாக சித்தப்பாவாக படத்தைப் பார்த்து தங்களது பழைய நினைவுகளை, கடந்த கால உணர்வுகளை நினைக்கும் போது அவர்களுக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது. மாமன் படத்தை நானே கதை எழுதி படமாக உருவாக்கினேன். அதற்கு காரணம் இருக்கிறது. நாங்கள் என்றும் எங்கள் ஊரில் கூட்டு குடும்பமாக வாழ்கிறோம்.
கூட்டு குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் என்பதெல்லாம் சகஜம். 5 பேர் உள்ள குடும்பத்திலேயே ஒருவர் சரியாக இருக்க மாட்டார். அதை மறந்து உறவுகளை அரவணைத்து செல்வது தான் சந்தோஷம் உள்ளது. அதை மனதில் வைத்தே இந்த கதையை நான் எழுதினேன். இந்த படம் வெளியான பிறகு ரசிகர்கள் என் மீது காட்டிய பாசம் அதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த படத்தை பார்த்த சிலர் என்னை கட்டிப்பிடித்து அழுது விட்டனர்.
நகைச்சுவை நடிகராக நடிப்பதற்கும் நாயகனாக நடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. காமெடி நடிகனாக பஞ்ச் டயலாக் பேசி சிரிக்க வைக்கிற அளவுக்கு கொடுத்ததை செய்தால் போதும். அதே ஹீரோவாக நடிக்கிறபோது படத்தை முழுவதுமாக சுமக்கிற பொறுப்பு தானே வந்து விடுகிறது.
அந்த படம் பூஜை போட்டது முதல் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓட வைக்கிற வரைக்கும் ஒரு குடும்பத்தை ஒரு எப்படி ஒரு குடும்பத் தலைவர் கொண்டு செல்கிறாரோ, அதேபோன்று படத்தின் நாயகனுக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது. தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்கவே வாய்ப்பு வருகிறது. அதனால் எனக்கு பொறுப்பு கூறியிருப்பதாக உணர்கிறேன் என்று நடிகர் சூரி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





