- Advertisement -
Homeபொழுதுபோக்கு500 பேருக்கு மத்தியில் அப்படி நின்றது மிகப்பெரிய கொடுமை, ஷங்கர் படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்...

500 பேருக்கு மத்தியில் அப்படி நின்றது மிகப்பெரிய கொடுமை, ஷங்கர் படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம் – மனக்குமுறலை கொட்டித் தீர்த்த நடிகர் ஸ்ரீகாந்த்!

- Advertisement -

ரோஜாக்கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அழகான நடிகர். தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அவர் நடித்த ஏப்ரல் மாதத்தில், போஸ், ரெடி ஜூட், முருகா, பார்த்திபன் கனவு, கனா கண்டேன், மெர்க்குரி பூக்கள், வர்ணஜாலம், பம்பர கண்ணாலே என பல படங்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்தன.

குறிப்பாக சினேகா, ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்த ஏப்ரல் மாதத்தில், போஸ் மற்றும் பார்த்திபன் கனவு போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன. சினேகா, ஸ்ரீகாந்த் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால் அவர்கள் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் வதந்தி பரவியது. பிறகு சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

- Advertisement -

ஸ்ரீகாந்த் பல படங்களில் நடித்திருந்தாலும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் விஜய், ஜீவா ஆகியோருக்கு நண்பனாக நடித்திருந்தார். ஒரே கல்லூரியில் படிக்கும் இவர்கள் 3 பேரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதுதான் படத்தின் கதை. இதில் கண்டிப்பான பிரின்ஸ்பால் கேரக்டரில் சத்யராஜ் மிரட்டி இருப்பார்.

நண்பன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நேர்காணல் ஒன்றில் நடிகர் ஸ்ரீகாந்த் கூறியதாவது, ராகிங் செய்கிற ஒரு காட்சியில் நானும் ஜீவாவும் அண்டேர்வேருடன் நின்றிருக்கிறோம். சுத்தியும் 200 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இருக்கின்றனர். படப்பிடிப்பு குழுவினர் 250 பேர் இருக்கின்றனர். 500 பேருக்கு மத்தியில் ஆடையே இல்லாமல் நிற்பது போன்ற உணர்வில் மிகவும் வேதனைப்பட்டேன். அது ரொம்பவும் கொடுமையாக இருந்தது.

- Advertisement -

அப்போது நடித்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சரியாக நடிக்காமல் சொதப்பியதால் 12, 13 டேக் போய்விட்டது. விஜய் மாணவர்களை சுற்றி வந்து தண்ணீர் ஊற்றுவது போன்ற ஒரு காட்சி அது. டேய் சீக்கிரமா இந்த சீனை முடிச்சுடுறா, உன் கால்ல கூட விழறோம். ரொம்ப கேவலமா இருக்குதுடா என்று கூட அந்த ஜூனியர் நடிகரிடம் நான் சொன்னேன்.

அப்போது அங்கிருந்த அசோசியேட் டைரக்டரும் அதிக டேக் போனதால் கோபமாகி விட்டார். அந்த ஜூனியர் நடிகரை திட்டி விட்டார். அப்போது அங்கிருந்த ஷங்கர், எதுக்கு சத்தம் போடறீங்க, ஆர்ட்டிஸ்ட் நடிக்க தெரியலைன்னா கோபப்படாதீங்க, அதை சொல்லி தரத்தான் நாம இருக்கிறோம். என்று சொல்லி அந்த ஜூனியர் நடிகரை சமாதானப்படுத்தி அந்த காட்சியை எடுத்தார். அடுத்த ஒரே டேக்கில் அந்த காட்சி ஓகே ஆனது, என்று அந்த நேர்காணலில் நடிகர் ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்