நடிகர் சூர்யா இப்போது அடுத்தடுத்த தனது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்த கருப்பு படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஏப்ரல் மாதமே சட்டசபை தேர்தல் நடக்கும் பட்சத்தில் மீண்டும் இந்த படம் ரிலீஸ் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது.
கருப்பு படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது.
திரைப்பட நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் நடிகர் சூர்யா படங்களை தயாரித்து வருகிறார். இப்போது ழகரம் ஸ்டுடியோஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் துவங்கியிருக்கிறார். அத்துடன் பல ஆண்டுகளாக அகரம் பவுண்டேசன் என்ற அறக்கட்டளை வாயிலாக பல ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவிகளை செய்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் 1960 மற்றும் 70களில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன் முத்துராமன் ஜெய்சங்கர் போன்ற நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சரோஜா தேவி. இவரை கன்னடத்து பைங்கிளி என்றும் அபிநய சரஸ்வதி என்றும் ரசிகர்கள் அழைத்தனர்.
கடந்த 2009ம் ஆண்டில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த ஆதவன் என்ற படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நாயகனாக சூர்யா நாயகியாக நயன்தாரா மற்றும் வடிவேலு அனுஹாசன் ரமேஷ் கண்ணா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஆதவன் படத்தில் முக்கியமான கேரக்டரில் பழம்பெரும் சீனியர் நடிகை சரோஜாதேவியும் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த அவருக்கு சம்பளம் ரூ. 1 கோடி தருமாறு நடிகர் சூர்யா கூறியிருக்கிறார். அதையும் தனது சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுமாறு நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார். அதை மறுத்த உதயநிதி, சூர்யாவின் சம்பளத்தை குறைக்காமல் அவரே ரூ. 1 கோடி சம்பளத்தை நடிகை சரோஜா தேவிக்கு வழங்கியிருக்கிறார்.





