- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு படத்தில் வரும் கிளைமாக்ஸ் பாடல் காட்சி - அந்த பாடல் உருவாக அவர்தான் காரணம்,...

கருப்பு படத்தில் வரும் கிளைமாக்ஸ் பாடல் காட்சி – அந்த பாடல் உருவாக அவர்தான் காரணம், சீக்ரெட்டை சொன்ன நடிகர் சூர்யா!

- Advertisement -

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவுக்கு கருப்பு படம் மிகப்பெரிய மிக பிரமாண்டமான ஒரு வெற்றியை தந்திருக்கிறது. இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கருப்பு படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 207 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளி இருக்கிறது.

இந்த படத்தில் நடிகை திரிஷா மற்றும் சுவாசிகா இந்திரன்ஸ் யோகிபாபு ஷிவதா நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். கருப்பு படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா மனம் திறந்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

இவ்விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது. கருப்பு படம் குறித்த முடிவு 30 முதல் 45 நிமிடங்களுக்குள் எடுக்கப்பட்டது. சமீப காலமாக இவ்வளவு வேகமாக நான் எந்த ஒரு படத்தையும் தேர்வு செய்தது இல்லை. அன்றைக்கு எல்லாமே சரியாக இருந்த மாதிரி இருந்துச்சு. இது முழுக்க முழுக்க ஆர்ஜே பாலாஜியின் விஷன்தான்.

அவர் கதை சொல்லும் போதே தியேட்டரில் வேற மாதிரி இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது. நம்பிக்கை வைத்து தான் எல்லா படங்களையும் பண்றோம். படம் குறித்த முடிவு பண்ண முதல் நாளிலிருந்து எல்லாமே சரியாக போச்சு. அதுக்கு முழு காரணம் தயாரிப்பு நிறுவனம்தான். எல்லா முடிவுகளையும் சரியாக எடுக்க வைத்ததற்கு கருப்பசாமிக்குதான் நன்றி சொல்லணும்.

- Advertisement -

இது ஆசைப்பட்டது. ஆனால் எதிர்பார்க்காத பெரிய வெற்றி கொடுத்த எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளேன். அதேபோல் சமீப காலத்தில் எனது படத்துக்கு இத்தகைய வரவேற்பு கிடைத்ததையும் நான் கண்டதில்லை. உலகம் முழுவதும் இதற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அனைவருக்கும் நன்றி.

கருப்பு படத்தில் வரும் கிளைமாக்ஸ் பாடல் காட்சி என்னுடைய உதவியாளர் குமார் என்பவர்தான் சொன்னார். படத்தை எடுத்து முடித்த பிறகு 5 மாதங்கள் கழித்துதான் இந்த பாடல் காட்சி எடுக்கப்பட்டது. ஆனால் கிளைமாக்ஸில் வரும் இந்த பாடல் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் என்னுடைய உதவியாளர் குமார் என்பதை பெருமையாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த விழாவில் நடிகர் சூர்யா பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்