- Advertisement -
ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா கூறியதாவது, நான் மட்டும் தி ஒன் கிடையாது. நாம் அனைவரும் ஒன்று என்பதால் தான் அது தி ஒன். நாம் அனைவரும் ஒன்றே. என் மனதில் இதை என் பெயராகவோ அல்லது எனக்குரிய டேக்லைனாகவோ நான் பார்க்கவில்லை. ஆனால் தி ஒன் என்பது நாம் அனைவரும் சேர்ந்ததுதான். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்தால் மட்டுமே அது தி ஒன் ஆக மாறும். என்னை பொறுத்தவரை இது எப்போதும் அப்படித்தான். நாம் அனைவரும் ஒன்று. நாம் ஒரே குடும்பம். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் காட்டும் இந்த அன்பு எல்லையற்றது. ஒரு நன்றி சொல்வது இதற்கு ஒருபோதும் ஈடாகாது. நான் எப்போதும் உங்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன். எப்போதும் உங்களுடன் இருப்பேன். திரையில் உங்களை தொடர்ந்து மகிழ்வித்து கொண்டே இருப்பேன் என்று நடிகர் சூர்யா பேசினார்.





