தமிழ் திரை உலகைத் தாண்டி இந்தி திரையுலகிலும் வெற்றிக் கொடியை நாட்டி இருக்கிறார் இயக்குனர் அட்லி. இயக்குனர் சங்கரிடம் உதவியாளராக இருந்த அவர், முதல்முறையாக ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஏ ஆர் முருகதாஸ் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து விஜயை வைத்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார் அட்லி. தெறி, மெர்சல், பிகில் என மூன்று திரைப்படங்களும் வணிகரீதியாக லாபத்தை கொடுத்தன. ஆனால் இந்த திரைப்படங்களின் மூலம் அட்லியின் பெயர் டேமேஜ் ஆனது தான் மிச்சம்.
காப்பி கேட்டாக அவர் இருப்பதாகவும், பல்வேறு திரைப்படங்களின் காட்சிகளை தான் அவர் காப்பி செய்து படமாக்கி வருவதாகவும் பலர் கலாய்க்க ஆரம்பித்தனர். எத்தனை எத்தனை திரைப்படங்களை தான் அட்லி சுடுவார் என்றும் அவர் மீது விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால் இது எதுவும் படத்தின் வசூலை பாதிக்கவில்லை.
அவரது படங்கள் கோடிக்கணக்கில் புரண்டு நல்ல வணிக லாபத்தை கொடுத்ததால் இந்த விமர்சனங்களை எதுவும் அட்லி கண்டுகொள்ளாமல் இருந்தார். இப்படியான சூழலில் தான் அவருக்கு ஹிந்தி திரையுலகில் ஷாருக்கானுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அட்லி, ஜவான் எனும் கமர்சியல் திரைப்படத்தை இயக்கினார்.
பலரும் எதிர்பார்த்தது போலவே அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. அது மட்டுமல்லாமல் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அந்த திரைப்படம் வசூல் ஈட்டியது. வழக்கம்போல் இந்த திரைப்படம் தமிழில் ஈடுபடவில்லை. இதிலும் அட்லி காப்பி செய்திருப்பதாக பலரும் அவரை வசைபாடினர். இது ஒரு பக்கம் இருக்க, அட்லி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே அவர் நடிகர் ஜீவாவை வைத்து சங்கிலி புங்கிலி கதவ தொற என்னும் படத்தை தயாரித்திருந்தார்.
தற்போது மும்பையிலேயே செட்டில் ஆகி இருக்கும் அவர், தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கை தயாரித்து இருக்கிறார். இதற்கு பேபி ஜான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வருண் தவான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக வருகிறார். இதனைத் தொடர்ந்து, மீண்டும் தமிழில் ஒரு படத்தை தயாரிக்க அட்லி திட்டமிட்டு இருக்கிறார். இதில் கதாநாயகனாக நடிக்க போவது விஜய் சேதுபதி தான். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் திரைப்படத்தை எடுத்த பாலாஜி தரணிதரன் தான் இந்த திரைப்படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது.





