- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அடுத்து நடிக்கும் மாஸ் ஹீரோ… ரஜினிக்கு சொன்ன கதைதான் அது… அட...

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அடுத்து நடிக்கும் மாஸ் ஹீரோ… ரஜினிக்கு சொன்ன கதைதான் அது… அட என்னங்க இது என ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

முன்பெல்லாம் இயக்குனர் என்றாலே அவர்களிடம் நிறைய கதை இருக்கும். அதில் சில ஹீரோக்கள் இந்த கதையில் நாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர்கள் விரும்புவார்கள். அதனால் கதைகளுக்கு இயக்குனர்களிடம் பஞ்சமே இருக்காது. ஆனால் இப்போதைய நிலைமை அப்படியல்ல.

ஒரு இயக்குனரிடம் ஒரு நல்ல கதை இருப்பதே பெரும்பாடாக உள்ளது. பல முன்னணி இயக்குனர்களிடம் கதை என்கிற சரக்கு இல்லாததால் தான் மற்ற மொழி படங்களில் இருந்தும் ஹாலிவுட் படங்களில் இருந்தும் கதையை ஜெராக்ஸ் காப்பி எடுத்து விடுகின்றனர். இதில் சில இயக்குனர்கள் 1960 1970 1980 களில் வெளிவந்த தமிழ் படங்களின் கதைகளையே சுட்டு விடுவதும் அடிக்கடி நடக்கிறது.

- Advertisement -

ஒரு கதையை வைத்துக்கொண்டு அதை ரஜினி கமல் சிம்பு விஜய் தனுஷ் அஜீத்குமார் சூர்யா என அனைவருக்குமே அந்த கதையை சொல்வதுதான் சில இயக்குனர்களின் வழக்கமாக உள்ளது. ஹீரோவின் வயதுக்கு ஏற்ப அதில் சில திருத்தங்களை மாற்றங்களை செய்வது மட்டுமே இயக்குனர்களின் கைவந்த கலையாக உள்ளது.

நடிகர் அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் ஆகிய வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. அடுத்ததாக நடிகர் சூர்யா நடிக்கும் படத்தை அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்ய கமிட் ஆகி உள்ளார். அதற்கு முன்பாக நடிகர் சிம்பு நடிக்கும் காட் ஆஃப் லவ் என்ற படத்தையும் அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்த படத்திற்கான ப்ரீ புரடக்சன் பணிகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

- Advertisement -

இதற்கிடையில் கூலி படத்துக்கு பல இயக்குனர்களிடம் ரஜினி கதை கேட்டார். அதில் ஒருவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. நடிகர் ரஜினியிடம் அஸ்வத் மாரிமுத்து ஒரு கதை சொன்னார். அந்த கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும் அந்த படத்தில் ரஜினி நடிக்க முன்வரவில்லை. அதற்கு பதிலாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஓகே சொல்லி விட்டார்.

இந்த சூழ்நிலையில் நடிகர் ரஜினிக்கு சொன்ன அதே கதையை தற்போது சூர்யாவிடம் சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. இந்த படம் கமர்ஷியல் எண்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும். அயன் படத்தில் இருந்த வைப் இந்த படத்தில் நிச்சயம் இருக்கும். நடிகர் சூர்யாவுக்கு அயன் படம் போல நான் இயக்கும் இந்த படமும் ஒரு பெரிய வெற்றியை தரும் என்றும் அஸ்வத் மாரிமுத்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்