- Advertisement -
Homeபொழுதுபோக்கு2 ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வந்த அஜீத்குமார் படம், 7 நாட்களில் வசூல் நிலவரம் -...

2 ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வந்த அஜீத்குமார் படம், 7 நாட்களில் வசூல் நிலவரம் – தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடிகளா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜீத்குமார். கடந்த 2023ம் ஆண்டில் ஜனவரி 10ம் தேதி அஜீத்குமார் மஞ்சு வாரியார் நடித்த துணிவு படம் வெளியானது. இந்த படத்துக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து கடந்த 6ம் தேதி அஜீத்குமார் நடிப்பில் விடாமுயற்சி படம் ரிலீஸானது.

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான விடாமுயற்சி படம், எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பதே படம் பார்த்த பலரது விமர்சனமாக இருந்தது. குறிப்பாக அஜீத் போன்ற மாஸ் ஹீரோ இதுபோன்ற கதையில் நடித்ததே தவறு என்றும் பலர் தெரிவிக்கும் அளவுக்கு படம் இருந்தது.

- Advertisement -

தமிழ் சினிமா மட்டுமின்றி எந்த மொழி ஹீரோவாக இருந்தாலும் அவர்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு இமேஜ் இருக்கிறது. அந்த ஹீரோக்கள் மாஸ் காட்டும் கேரக்டர்களில் நடிப்பதுதான் அந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும். அதனால்தான் 74 வயதிலும் ஹீரோயிசம் காட்டும் கமர்ஷியல் படங்களில் நடித்து ரஜினிகாந்த் கோடிகளை அள்ளிக் கொண்டு இருக்கிறார்.

நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்யாமல், தன்னை பில்டப் செய்யும் ஹீரோயிசத்தை தூக்கலாக காட்டும் கமர்ஷியல் இயக்குனர்களை தேர்வு செய்து, தனது படங்களை இயக்க வைக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் நெல்சன் லோகேஷ் கனகராஜ் போன்ற இளம் இயக்குனர்களை வைத்து தன் படங்களை ஜெயிக்க வைக்கிறார்.

- Advertisement -

ஆனால் விடாமுயற்சி படத்தில் அஜீத்குமாரை மிகவும் பணிவானவராக காட்டி வில்லன்களை அவர் கெஞ்சுவதும், வில்லன்கள் அவரை தாறுமாறாக அடிப்பதும் போன்ற காட்சிகள் அஜீத் ரசிகர்களை மிகவும் அப்செட் செய்திருக்கின்றன. வித்யாசமான கதை என்பதற்காக அஜீத் இமேஜை இயக்குனர் டேமேஜ் செய்துவிட்டார் என்றும் புலம்பிக் கொண்டு இருக்கின்றனர்.

கடந்த 6ம் தேதி விடாமுயற்சி படம் ரிலீஸான நிலையில், 12ம் தேதி நேற்று வரை மொத்தம் 7 நாட்களில் உலகளவில் இந்த படம் ரூ. 140 கோடி வசூலித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 86 கோடி வசூலை கடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எதிர்மறை விமர்சனங்களை கடந்து பெரிய வசூலை தொட்டிருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு வந்த அஜீத்குமார் படம் என்பதால் விடாமுயற்சிக்கு வசூல் கணிசமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்