- Advertisement -
Homeபொழுதுபோக்குகோடம்பாக்கத்துல இருந்து நேரா எம்ஜிஆர் கோட்டைக்கு வரலே… பாவம் விஜய்க்கு அரசியல் தெரியலே -...

கோடம்பாக்கத்துல இருந்து நேரா எம்ஜிஆர் கோட்டைக்கு வரலே… பாவம் விஜய்க்கு அரசியல் தெரியலே – தவெக தலைவரை கலாய்த்த மூத்த நடிகர் எஸ்வி சேகர்!

- Advertisement -

கடந்த 1980 90ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் எஸ்வி சேகர். ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் காமெடி கேரக்டர்களில் நடித்தவர். குறிப்பாக இயக்குனர் விசு படங்களில் எஸ்வி சேகர் நிறைய நடித்திருக்கிறார். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி நாடகப்பிரியா என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் மேடை நாடகங்களை அரங்கேற்றியவர்.

சமீபகாலமாக சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்ட சீனியர் நடிகர் எஸ்வி சேகர் அவ்வப்போது அப்பா கேரக்டர்களில் நடித்து வருகிறார். பாஜக குறித்தும் நடிகர் விஜய் குறித்தும் அவ்வப்போது கடும் விமர்சனங்களை செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் பல கருத்துகளை பேசி வருகிறார். திமுக ஆதரவாளராகவும் சமீபகாலமாக அவர் இருந்து வருகிறார்.

- Advertisement -

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் எஸ்வி சேகர் கூறியதாவது, எம்ஜிஆர் கோடம்பாக்கத்துல இருந்து நேரா கோட்டைக்கு வரலைங்க. அவர் வந்து ஒரு கட்சியில் 20 வருஷம் இருந்து திமுக வளர்ச்சிக்கு பாடுபட்டு அவரது படங்களில் திமுக பற்றி பேசி திமுக அவருக்கு ஆதரவு தந்து ஒரு கட்டத்தில் ஒரு சிறிய பிரச்னையால் அவர் வெளியே வந்து தனியாக கட்சி ஆரம்பித்தார்.

ஷூட்டிங்கில் டூயட் பாடீட்டு அப்படியே வந்து எம்ஜிஆர் தேர்தலில் ஜெயிச்சார் என்று விஜய் நினைத்தால் அவருக்கு பாவம் அரசியல் தெரியலே என்று அர்த்தம்.
தமிழக அரசு வருஷாவருஷம் இங்கே எக்ஸிபிசன் நடத்தறாங்க. அதுக்கு வர்ற கூட்டத்தை விடவா விஜய்க்கு வர்றாங்க. அதுவும் இங்க காசு கொடுத்து வர்றாங்க. லட்சக்கணக்குல வர்றாங்க. அதனால் பார்க்க வர்ற கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. திருச்சியில் வந்த கூட்டம் நாகப்பட்டணத்துல அவருக்கு வரலையே?

- Advertisement -

மனப்பாடம் பண்ணிட்டு வந்து 3 நிமிஷம் பேசறது 5 நிமிஷம் பேசறது என்ன அங்கிள் என்று சொல்றது இதெல்லாம் சினிமாவுல உதவும். இதெல்லாம் முடியாது. விஜய் ஜனங்ககிட்ட போகணும். ஜனங்களோட தொடர்புல இருக்கணும். விஜய் போன் நம்பர் கொடுங்க. யார் வேணாலும் உங்க குறைகளை என்கிட்ட சொல்லுங்கன்னு சொல்லுங்க. அவருக்கு எழுதி கொடுக்கறவங்களும் தப்பு தவறுமா எழுதி கொடுக்கறாங்க. பாண்டிச்சேரியில் 4 தெரு 5 தெரு இருந்தாலே எம்எல்ஏ ஆயிடலாம் என்றால் அப்படிப்பட்டங்களை எல்லாம் அட்வைஸராக வைத்துக்கொண்டால் தமிழ்நாட்டில் எப்படி ஜெயிக்க முடியும்?

விஜய் இன்னும் பக்குவப்பட வேண்டும். விஜய்க்கு அரசியலில் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு அவர் 15 அல்லது 20 வருஷம் அவர் உழைக்கணும். வாரத்துல ஒரு நாள் சனிக்கிழமை மட்டும் வந்தால் ஆகாது. ஏன்னா அரசியல் என்பது 24 மணி நேரமும் செய்யக்கூடிய ஒரு சேவை. அதை அவர் புரிஞ்சுக்கணும். இப்பதான் ஒரு கேரவன்ல இருந்து இறங்கி வந்து இன்னொரு கேரவன்ல ஏறி பேசிட்டு இருக்கிறார். விஜயை நாம் தவறாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அரசியல் என்றால் என்ன தேர்தல் என்றால் என்ன என்று 2026 தேர்தல் விஜய்க்கு புரிய வைக்கும் என்று எஸ்வி சேகர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்