- Advertisement -
Homeபொழுதுபோக்குநானே அந்த நேரத்துல ரொம்ப மோசமாக இருந்தேன், அப்படி நான் நினைச்சே பார்க்கலே - நடிகர்...

நானே அந்த நேரத்துல ரொம்ப மோசமாக இருந்தேன், அப்படி நான் நினைச்சே பார்க்கலே – நடிகர் விவேக் மறைவு குறித்து நீண்ட நாட்களுக்கு பின் பேசிய நடிகர் வடிவேலு!

- Advertisement -

நடிகர் வடிவேலு நடிகர் விவேக் இருவருமே தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் கொடி கட்டிப் பறந்தவர்கள். குண்டக்க மண்டக்க காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் வடிவேலு என்றால், சமூகத்தில் நடக்கும் மூட நம்பிக்கைகளை மையப்படுத்திய காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நடிகர் விவேக்.

பல படங்களில் நடிகர் வடிவேலு நடிகர் விவேக் இணைந்து நடித்திருக்கின்றனர். குறிப்பாக விரலுக்கேத்த வீக்கம் பட்ஜெட் பத்மநாபன் பொங்கலோ பொங்கல் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை கந்தா கடம்பா கதிர்வேலா லூட்டி உள்ளிட்ட பல படங்களில் வடிவேலு விவேக் நடித்த காமெடி காட்சிகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

குறிப்பாக மனதை திருடிவிட்டாய் படத்தில் வடிவேலு துபாய் எண்ணெய் கிணறு உரிமையாளர் போல ஏமாற்றுவார், ஓட்டலில் சர்வராக இருக்கும் விவேக் வடிவேலு காதலிக்கும் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துகொள்வார். இந்த படத்தில் விவேக் வடிவேலு காம்பினேஷன் பெரிய அளவில் ரசிகர்களிடம் சிரிப்பை வரவழைத்தது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் 2021ம் ஆண்டில் கொரோனா காலகட்டத்தில் நடிகர் விவேக் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மறைந்து விட்டார். கோவித் தடுப்பூசி போட்ட மறுநாளே அவர் இறந்தது பெரிய சர்ச்சையை கிளப்பியது. எனினும் 59 வயதில் அவரது மறைவை ரசிகர்களால் ஏற்கவே முடியவில்லை. பெரிய அளவில் ரசிகர்கள் வேதனைப்பட்டனர். ஆனால் அவரது மறைவுக்கு சக காமெடி நடிகரான வடிவேலு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. கண்ணீர் விட்டு அழுது வீடியோ ஒன்றை மட்டுமே வெளியிட்டு இருந்தார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் வடிவேலு மறைந்த நடிகர் சின்னக் கலைவாணர் விவேக் குறித்து பேசியதாவது, விவேக் இறந்து போனது எனக்கு தாங்க முடியாத வலியாக இருந்தது. அவர் இறப்புக்கு நான் போகவில்லை என்று நிறைய பேர் சொன்னார்கள்.

ஆனால் வீட்டுக்கு எல்லாம் சென்று விவேக்கின் மனைவி குழந்தைகள் அனைவரிடமும் நான் துக்கம் விசாரித்தேன். அவர் இறப்பார் என்று நான் நினைக்கவே இல்லை. அந்த காலகட்டத்தில் நானே ரொம்பவும் மோசமாகத்தான் இருந்தேன். எங்க வீட்டிலேயே ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகிட்டு பயந்துகிட்டு இருந்தாங்க. அதனால்தான் நான் போகவில்லை என்று நடிகர் வடிவேலு வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்