நடிகர் விஜய் சில தினங்களுக்கு முன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். வருகிற ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2வது அரசியல் மாநில மாநாடு நடைபெற உள்ளது என்ற முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இப்போது தவெக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் குழு மதுரையில் முகாமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.
ஆனால் கடந்த முறை போல இந்த முறை மாநாட்டில் எந்தவிதமான குழப்பமும் குளறுபடிகளும் குறிப்பாக சொதப்பலும் இல்லாமல் மாநாட்டை மிக சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்று கட்சியின் தலைமை நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சில விஷயங்களை அவரே நேரடியாக கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துள்ள விசாலை கிராமத்தில் தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு நடந்தது. அப்போது பொட்டல் காட்டில் வெயிலில் மணிக்கணக்கில் அமர்ந்த ஏராளமான மக்கள் நா வறண்டு போய் குடிக்க தண்ணீர் இல்லாமல் மயங்கி விழுந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மொபைல் டாய்லட் வசதி, ஆபத்து நேரங்களில் உதவ ஆம்புலன்ஸ் மருத்துவ வசதி உள்ளிட்டவை ஏற்பாடு சரிவர செய்யவில்லை. வழியில் சில இடங்களில் நடந்த விபத்துகளில் 6 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இந்த முறை மாநாட்டை மிக சிறப்பாக நடத்தி முடிக்க தவெக தலைவர் நடிகர் விஜய் ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.
மதுரையை பொருத்த வரை குறிப்பிட்ட மையப் பகுதியில்தான் மாநாட்டு மைதானம் அமைய உள்ளது. தவிர மதுரை மக்கள் உதவும் குணம் கொண்டவர்கள் என்பதால் தவெக மாநாட்டுக்கு வரும் மக்களுக்கு அவர்களே தானாக முன்வந்து உதவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அத்துடன் குடிநீர் கழிப்பிடம் மருத்துவம் போன்ற வசதிகளை சிறப்பாக செய்யவும் நடிகர் விஜய் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மதுரையில் நடக்கும் தவெக மாநாட்டில் அனைவருக்கும் உணவு பரிமாற முடியுமா? அதற்கான சாத்தியக்கூறு எப்படி உள்ளது என்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசித்து வருகிறார். அதுவும் சைவமாக இல்லாமல் கமகம மட்டன் பிரியாணி சிக்கன் குழம்பு முட்டை சிக்கின் சில்லி பிஷ் பிரை என அசைவ விருந்து படைத்து தனது கட்சி தொண்டர்களை ரசிகர்களை அசத்தவும் விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





