- Advertisement -
Homeபொழுதுபோக்குபுதுச்சேரியில் நடந்த சம்பவம், பதறிப்போய் அறிக்கை வெளியிட்ட தமிழக வெற்றிக்கழகம் தலைவர் நடிகர் விஜய் -...

புதுச்சேரியில் நடந்த சம்பவம், பதறிப்போய் அறிக்கை வெளியிட்ட தமிழக வெற்றிக்கழகம் தலைவர் நடிகர் விஜய் – அறிக்கையில் அவர் சொன்னது…?

- Advertisement -

ஒரு பெண், இரவில் நிறைய நகைகளை அணிந்து கொண்டு தனியாக நடந்து சென்றால், எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் அவள் அந்த பயணத்தை நிறைவு செய்தால்தான், இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று மகாத்மா காந்தியடிகள் சொல்லி இருக்கிறார்.

ஆனால் காந்தியடிகள் சொன்னபடி இரவில் அல்ல, பட்டப் பகலில் பெண் குழந்தைகள் தெருவில் விளையாடக் கூட முடியாத அளவில் பாதுகாப்பற்ற ஒரு தேசமாக இந்தியா இருப்பது வேதனைக்குரியது. மிகவும் அவலமானது. குறிப்பாக தொடர்ந்து பெண் குழந்தைகள், இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். கொடூரமாக துன்புறுத்தி உயிரை பறிக்கின்றனர்.

- Advertisement -

புதுச்சேரியில் நேற்று நடந்துள்ள அந்த கொடூர சம்பவம். புதுச்சேரியிலும், தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன் புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி, நேற்று வாய்க்கால் ஒன்றில், மூட்டையில் கட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமியை கடத்திச் சென்ற கும்பல், ஓரிடத்தில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்து, பல கொடுமைகளுக்கு ஆளாக்கி, கடைசியில் கொடூரமாக கொன்று மூட்டையில் கட்டி வைத்து, சடலத்தை வாய்க்கால் ஓரத்தில் வீசிச் சென்றுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் சம்பவமாக இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து தமிழக வெற்றிக்கழகம் தலைவர், நடிகர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, புதுச்சேரி முத்தையால் பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்கு கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த கொலையாளிகளுக்கு சட்டப்படி அதிகப்பட்ச தண்டனை பெற்றுத் தர புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நடிகர் விஜய் அந்த பதிவில் கூறியுள்ளார். இதே போல் மக்கள் நீதி மய்யத் தலைவர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இந்த கொடூர சம்பவத்துக்கு தங்களது வன்மையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்