- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த மாதிரி ஒரு கதை இருந்தா சொல்லுங்க - தனக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம்...

அந்த மாதிரி ஒரு கதை இருந்தா சொல்லுங்க – தனக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நடிகர் விஜய் சேதுபதி இப்படி ஒரு குண்டை தூக்கி போடலாமா?

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இதுவரை 52 படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் கடந்தாண்டில் வெளியான அவரது 50வது படம் மகாராஜா மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. கடந்த 2024ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூலித்த 8 படங்களில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படமும் ஒன்றாக இருந்தது. அதன்பிறகு சில மாதங்களுக்கு முன் அவரது நடிப்பில் வெளியான ஏஸ் படம் படுதோல்வியை சந்தித்தது.

ஏஸ் படத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் விஜய் சேதுபதி நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படம் குடும்ப பின்னணியில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் சண்டைகளை பிரச்னைகளை மையப்படுத்திய ஒரு கதைக்களத்தில் உருவாகி உள்ளது. இந்த படத்துக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதியை பொருத்த வரை இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் சிறந்த திரைக்கலைஞராக இருந்து வருகிறார். நாயகனாக மட்டுமின்றி காமெடி ரோலிலும் நடிப்பார். கேமியோ ரோலிலும் நடிப்பார். கமல் ரஜினிகாந்த் விஜய் ஷாருக்கான் போன்றவர்களின் படங்களில் வில்லன் கேரக்டரிலும் நடித்து விஜய் சேதுபதி அசத்தியிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கிய பீனிக்ஸ் விழான் என்ற படத்தில் ஆக்‌ஷன் கேரக்டரில் சூர்யா விஜய் சேதுபதி நடித்திருந்தார். சண்டை காட்சிகளில் அசத்தியிருந்தார். இந்த படம் பார்த்த பலரும் விஜய் அஜீத்குமார் போலவே மற்றொரு ஆக்சன் ஹீரோ கிடைத்துவிட்டார் என்று பாராட்டினர்.

- Advertisement -

ஆனால் பீனிக்ஸ் படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஆக்சன் படமாக ஒரு தரப்பு ரசிகர்களுக்கு இந்த படம் திருப்தியை தந்தாலும் குடும்பத்துடன் பார்க்க இந்த படம் தகுதியானது அல்ல என்றும் ஒரு தரப்பில் விமர்சனம் எழுந்தது. எனினும் விஜய் சேதுபதி மகன் சூர்யா, நல்ல படங்களை நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்தால் எதிர்காலத்தில் ஒரு நல்ல நடிகராக வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் பலரும் பாராட்டினர்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, தனது மகன் சூர்யாவின் நடிப்பு குறித்து அதிக அக்கறை காட்டி வருகிறார். தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், தனது மகன் நடிப்பது போன்ற ஆக்சன் கதைகள் இருந்தால் சொல்லுங்கள் என்றும் கேட்கிறார். மாறுபட்ட ஆக்சன் கதைகளில் தனது மகன் நடித்தால் நிச்சயம் பெரிய வெற்றி பெறுவார் என்றும் அவர் திட்டமிடுகிறார். இதென்ன வம்பா இருக்குது, அப்பாவுக்கு கதை சொல்ல வந்தால், அவர் தனது மகனுக்கு கதை கேட்கிறாரே என்று இயக்குனர்கள்தான் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்