- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் பிள்ளைகளை இதுவரை பெயர் சொல்லி நான் அழைத்தது இல்லை; மகன், மகளை இப்படி தான்...

என் பிள்ளைகளை இதுவரை பெயர் சொல்லி நான் அழைத்தது இல்லை; மகன், மகளை இப்படி தான் அழைப்பது வழக்கம் – ஆச்சரியப்படுத்திய நடிகர் விஜய் சேதுபதி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் துணை நடிகராக சில படங்களில் நடித்து பிறகு தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் கதையின் நாயகனாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அம்மா கேரக்டரில் நடித்த சரண்யா பொன்வண்ணனுக்கு சிறந்த துணை நடிகை தேசிய விருது கிடைத்தது.

தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ரம்மி பண்ணையாரும் பத்மினியும் சூது கவ்வும் விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறி, ஹீரோவாக ரசிகர்களை அசத்தினார்.

- Advertisement -

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான மகாராஜா படம் 100 நாட்கள் கடந்த வெற்றிப் படமாக இருந்தது. 100 கோடி ரூபாய் வசூல் சாதனையை ஆபீஸ் பாக்ஸில் இடம் பிடித்தது. சீனாவில் வெளியான மகாராஜா படம் அங்கும் வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் பரோட்டா மாஸ்டராக ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் முடிவடைய உள்ள நிலையில், பாலாஜி தரணிதரன் படத்தில் அடுத்து விஜய் சேதுபதி நடிக்கிறார். அதே போல் சுந்தரபாண்டியன் பட இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் படத்திலும் நடிக்க கமிட் செய்திருக்கிறார்.

- Advertisement -

நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி தனது பிள்ளைகள் குறித்து கூறியதாவது, எனது மகன் மற்றும் மகளிடம் நான் எப்போதும் அப்பா என்று அதிகாரம் செய்ததில்லை. அவர்களிடத்தில் நானும் ஒரு குழந்தை போல தான் என்னை வெளிப்படுத்துவேன். அத்துடன் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவர்கள் இருவரிடமும் நான் கருத்து கேட்பேன். அவர்களின் கருத்துக்களுக்கும் நான் முன்னுரிமை கொடுப்பேன்.

முக்கியமாக படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் விஷயங்களை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்வேன். நான் இதுவரை என் மகன் பெயரைச் சொல்லி அழைப்பதில்லை. என் மகன் சூர்யாவை அப்பா என்றும் மகள் ஸ்ரீஜாவை அம்மா என்றும்தான் அழைத்து வருகிறேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்