- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா படம் தோல்வி குறித்து கேள்வி எழுப்பிய தெலுங்கு செய்தியாளர், நெத்தியடி பதில் தந்த நடிகர்...

கங்குவா படம் தோல்வி குறித்து கேள்வி எழுப்பிய தெலுங்கு செய்தியாளர், நெத்தியடி பதில் தந்த நடிகர் விஜய் சேதுபதி – பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தற எங்ககிட்டயேவா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. துவக்கத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிறகு, தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக ஆனார். பல வெற்றிப் படங்களை கொடுத்த விஜய் சேதுபதி, இப்போது முன்னணி நடிகராக இருக்கிறார். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டில் வெளியான அவரது 50வது படம் மகாராஜா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 2024ம் ஆண்டில் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூலை கடந்த படங்களில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் டைரக்ட் செய்திருந்தார்.

- Advertisement -

தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை 2 படம் வருகிற 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்று வருகிறார். விடுதலை முதல் பாகத்தை காட்டிலும், 2ம் பாகத்தில் விஜய் சேதுபதி கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் விடுதலை 2 படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை படக்குழு செய்திருந்தது. மேலும் அங்கு விஜய் சேதுபதி ஒருநேர்காணலில் பங்கேற்றார். அப்போது தெலுங்கு பத்திரிகையாளர் ஒருவர், அவரிடம் கேள்விகள் கேட்க அது தொடர்பாக விஜய் சேதுபதி பதில்களை அளித்தார்.

- Advertisement -

அப்போது சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா படம் தோல்வி அடைந்தது பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜய் சேதுபதி பதில் கூறுகையில், நான் என்னுடைய படத்தின் பிரமோசனுக்காக இங்கு வந்திருக்கிறேன். அதைப்பற்றி நான் ஏன் பேச வேண்டும். எல்லா படமும் வெற்றி அடைய வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் எடுக்கிறார்கள்.

ஒரு சின்ன ஓட்டல் தொழிலாக இருந்தாலும், அது வெற்றி பெற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில்தான் அந்த தொழிலை செய்வார்கள். நானும் நிறைய தோல்விகளை சந்தித்து இருக்கிறேன். என்னைப் பற்றிய ட்ரோல்களை பார்த்திருக்கிறேன் என்று விஜய் சேதுபதி கோபமாக பதில் தந்துள்ளார். சக நடிகரான சூர்யாவை விட்டுத்தராமல் விஜய் சேதுபதி பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்