- Advertisement -
Homeபொழுதுபோக்குபட்டுவேட்டி சட்டையில் தளபதி என்ன ஒரு மாஸ் காட்றாருப்பா, அசந்து போன ரசிகர்கள் - டி...

பட்டுவேட்டி சட்டையில் தளபதி என்ன ஒரு மாஸ் காட்றாருப்பா, அசந்து போன ரசிகர்கள் – டி 69 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது – போட்றா வெடிய!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் என்றாலே அது மாஸ்தான். இப்போது மீண்டும் அது ஒரு முறை நிரூபணம் ஆகி இருக்கிறது. ஏனெனில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று மிகச் சிறப்பாக நடந்தது. அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பட்டு வேட்டி சட்டையில் தளபதியின் புதிய கட்டப்பை பார்த்து, என்ன ஒரு மாஸ் காட்டுகிறார் என்று ரசிகர்கள் அசந்து போய், அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆல் டைம் படம் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. உலகம் முழுவதும் 460 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என்ற இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

- Advertisement -

தி கோட் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். தி கோட் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனது கடைசி படமாக தளபதி 69 படத்தில் நடிக்கிறார். அவர் அரசியலுக்கு செல்லும் காரணத்தால் இந்த படத்துடன் தனது நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு சினிமாவை விட்டு முழுமையாக விலகுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

தளபதி 69 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, டைரக்டர் எச் வினோத் இயக்குகிறார். கே வி என் புரடக்சன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. பிரமாண்டமான அளவில், பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், நடிகைகள் குறித்த அப்டேட் தொடர்ந்து வெளிவந்து வருகிறது.
தளபதி 69 படத்தில் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, பூஜா ஹெக்டே, பிரேமலு நாயகி மமிதா பைஜூ என முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளனர்.

- Advertisement -

ஏற்கனவே இவர்கள் நடிப்பது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் போஸ்டர் வெளியிட்டு அறிமுகப்படுத்திவிட்டனர். இதைத்தொடர்ந்து இன்று தளபதி 69 படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அங்கு பட பூஜை விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளன. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த பட பூஜையில் விஜய் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, இயக்குனர் எச் வினோத், வில்லன் நடிகர் பாபி தியோல் உட்பட படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் மாலையும் கழுத்துமாக நிற்கும் இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. நாளை தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் பையனூரில் துவங்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்