- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சங்க கட்டிடம் குறித்து விஷால் சொன்ன அந்த வார்த்தை - விஜயை பற்றி சூசகமாக...

நடிகர் சங்க கட்டிடம் குறித்து விஷால் சொன்ன அந்த வார்த்தை – விஜயை பற்றி சூசகமாக கூறியது அதற்காக தானா? – இப்பவே பிட்டை போட்டுட்டீங்களா ப்ரோ?

- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுமான பல ஆண்டுகளாக இழுபறியாக நீடித்து வருகிறது. பல காரணங்களால் கட்டுமான பணி பாதியில் அப்படியே நிற்கிறது. இதற்கு போதுமான நிதி திரட்ட முடியாமல், நடிகர் சங்க முக்கிய நிர்வாகிகளும் தடுமாற்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், வங்கியில் இருந்து நடிகர் சங்க கட்டிட கட்டுமான பணிக்காக ரூ. 40 கோடி என கடன் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வைப்புநிதி திட்டத்தில், முக்கிய நடிகர்களிடம் இருந்து முதல்கட்டமாக 30 கோடி ரூபாய் வரை வாங்கவும், அந்த நிதியுதவியை வழங்கவும் கோரிக்கை விடப்பட்டது.

- Advertisement -

இதையடுத்து நடிகர்கள் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், சூர்யா உள்ளிட்டோர் தலா ஒரு கோடி ரூபாய் வரை நடிகர் சங்கத்துக்கு வழங்க நிலையில், சமீபத்தில் தனது பங்களிப்பாக விஜய் ஒரு கோடி ரூபாயை நடிகர் சங்க நிர்வாகிகளிடம் வழங்கியுள்ளார். இன்னும் ரஜினிகாந்த், அஜீத்குமார், தனுஷ், விஜய் சேதுபதி, சியான் விக்ரம், நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இந்த நிதியை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விஜய், சங்க கட்டிட நிதியாக ரூ. ஒரு கோடி வழங்கியது குறித்து நடிகர் விஷால், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தேங்க் யூ என்ற 2 வார்த்கைள் மட்டுமே, ஆனால் ஒருவர் தன்னுடைய இதயபூர்வமாக உதவி செய்யும்போது அந்த வார்த்தைகள் வெளிப்படுத்தும் அர்த்தங்கள் அதிகம். விஜய் பிரதர் நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.

- Advertisement -

இந்த நடிகர் சங்க கட்டிடம், விஜயின் சப்போர்ட் இல்லாமல், முழுமையடையாது என எங்களுக்குத் தெரியும். விஜய் அளித்துள்ள இந்த நிதி எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இதை இப்போது விஜய் ஸ்டைலில் சொல்ல வேண்டும் எனில், நன்றி நண்பா என்று தனது எக்ஸ் தளத்தில் நடிகர் விஷால் பதிவு செய்துள்ளார்.

நடிகர் சங்க கட்டிடம் விஜய் சப்போர்ட் இல்லாமல் முழுமை அடையாது என்று எங்களுக்கு தெரியும் என்று விஷால் இதில் கூறியிருப்பது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கமல், உதயநிதி, கார்த்தி, சூர்யா என பலர் ஒரு கோடி ரூபாய் நிதி அளித்த நிலையில், விஜயை மட்டும் இப்படி குறிப்பிட காரணம், அவர் அரசியலுக்கு வந்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். எதிர்காலத்தில் அவர் தமிழகத்தின் முதல்வர் ஆவார். அப்போது கட்டி முடிக்கப்படும் நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க முதல்வராக விஜய் வர வாய்ப்புள்ளதால், அப்படி அவர் வந்து திறந்தால்தான் இந்த பணி முழுமை அடையும் என்பதை விஷால் சூசகமாக சொல்லியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்