- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷூக்கு விரைவில் இரண்டாவது திருமணம், மணமகள் குறித்து முடிவு செய்த கஸ்தூரிராஜா - விரைவில்...

நடிகர் தனுஷூக்கு விரைவில் இரண்டாவது திருமணம், மணமகள் குறித்து முடிவு செய்த கஸ்தூரிராஜா – விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

- Advertisement -

நடிகர் தனுஷ், ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து கடந்த 2004ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார். 18 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், லிங்கா மற்றும் யாத்ரா என 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022ம் ஆண்டில் அவர்களது பிரிவை, தங்களது டிவிட்டர் பக்கங்களில் அறிவித்தனர்.

எனினும் கணவன், மனைவிக்குள் ஏற்படும் குடும்ப பிரச்னைகளும், சிக்கல்களும் நாளடைவில் தீர்ந்து மீண்டும் அவர்கள் வாழ்வில் இணைந்து விடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அது ஏமாற்றத்தில் முடிந்தது. கடந்த மாதத்தில், இருவரும் தங்களுக்கு விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அதனால் அவர்களது நிரந்தர பிரிவு உறுதியாகி விட்டது.

- Advertisement -

நடிகர் தனுஷை பொருத்தவரை அவர் தனது தாய் தந்தை மீது அதிக அன்பும், பற்றும் கொண்டவர். அப்பா, அம்மா மீது எப்போதுமே பெரிய அளவில் மரியாதை வைத்திருப்பவர். ஆனால் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா, மாமனார், மாமியாரை பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக, சம்பந்தியாக ரஜினி வீட்டுக்கு சென்ற தனுஷின் பெற்றோர் பலமுறை அவமானப்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

குறிப்பாக, ரஜினிகாந்த் முன்னிலையிலேயே தனுஷின் பெற்றோரை, லதா ரஜினிகாந்த் ஒருமையில் பேசியிருக்கிறார். ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா ரஜினிகாந்த் குடும்பத்தினருக்கு அதிக முக்கியத்துவம் தந்து, தனுஷ் பெற்றோரை அலட்சியப்படுத்தும் விதமாக நடந்துக்கொண்டுள்ளனர். இதை எல்லாம் பார்த்து, தனுஷ் பலமுறை மன உளைச்சலில் தவித்திருக்கிறார். ஆனால் மருமகள் ஐஸ்வர்யா, எப்போதுமே தன் பெற்றோர் பக்கமே ஆதரவாக நடந்திருக்கிறார்.

- Advertisement -

இதற்கு பிறகுதான், இனியும் ஐஸ்வர்யா உறவு வேண்டாம் என தனுஷ் முடிவெடுத்துள்ளார். அதே போல் தனுஷ் தன்னுடன் நடித்த சில நடிகைகளுடன் தொடர்ந்து நெருக்கத்தில் இருந்ததும் ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக ஸ்ருதிஹாசன், சமந்தா, அமலா பால், திரிஷா போன்ற நடிகைகளுடன் தனுஷ் அதிக நெருக்கம் காட்டியதாக தெரிகிறது. இதுபோன்ற காரணங்களே அவர்களது நிரந்தர பிரிவுக்கு காரணமாகி விட்டது.

இந்நிலையில், தனுஷூக்கு 2வது திருமணம் செய்ய தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். தங்களது சொந்தத்தில் உள்ள ஒரு பெண்ணையே அவர்கள் பார்த்து முடிவும் செய்துள்ளனர். பெண் வீட்டாரும் ஓகே சொல்லி விட்ட நிலையில், தனுஷிடம் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் தனுஷ் இன்னும் உறுதி சொல்லாமல், நழுவி வருகிறார். அவர் பிடி கொடுக்காமல் நழுவி வந்தாலும் விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்