சில காமெடி நடிகர்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். அதிலும் காமெடி நடிப்பில் கடந்த 1990 முதல் 2010ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் ஒரு காமெடி ராஜ்ஜியமாக நடத்தியவர் என்றால் அது வைகைப்புயல் நடிகர் வடிவேலுதான். இப்போதும் அந்த காலகட்டத்தில் அவர் நடித்த ஏாளமான காமெடி காட்சிகள் டிரண்டிங்கில் உள்ளன.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அஜீத்குமாருடன் ராஜா என்ற படத்தில் நடிகர் வடிவேலு காமெடி ரோலில் நடித்தார். இந்த படத்தை சுராஜ் டைரக்ட் செய்தார். அப்போது ஹீரோ அஜீத்குமாரை ஷூட்டிங் இடைவேளையில் வடிவேலு ஒருமையில் அழைத்து பேசியதால் விரக்தி அடைந்த அஜீத்குமார், இனி வடிவேலு தனது படங்களில் நடிக்க கூடாது என கூறி விட்டார்.
அதன்பிறகு நடிகர் வடிவேலு அஜீத்குமார் நடித்த படங்களில் நடிக்கவில்லை. சந்தானம் விவேக் சூரி யோகிபாபு போன்றவர்களே நடித்தனர். அதே போல் நடிகர் தனுஷ் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். அவர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகவும் உள்ளார். ஆனால் அவரது ஒரு படத்தில் கூட நடிகர் வடிவேலு நடிக்கவில்லை.
நடிகர் தனுஷ் தமன்னா இணைந்து நடித்த படம் படிக்காதவன். இந்த படத்தில் காமெடி ரோலில் நடிக்க கமிட் ஆனாலர் நடிகர் வடிவேலு. தனுஷூடன் நடிகர் வடிவேலு சில நாட்கள் அலர்ட் ஆறுமுகம் கேரக்டரில் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். ஆனால் படத்தில் வரும் சில காட்சிகளில் அவர் நடிக்க மறுத்து அந்த படத்தில் இருந்து பிறகு முற்றிலும் விலகி விட்டார்.
அதன்பிறகு தான் அலர்ட் ஆறுமுகம் என்ற கேரக்டரில் உள்ளூர் தாதா கேரக்டரில் நடித்து காமெடியில் நடிகர் விவேக் அசத்தினார். தனது காதலியை தேடி நடிகர் தனுஷ் ஆந்திரா செல்வார். அவருக்கு உதவியாக செல்லும் காமெடி தாதா விவேக் செய்யும் அலப்பரைகள் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
இந்த படத்தில் தமன்னாவின் அப்பாவாக வரும் நடிகர் சுமன் காலை பிடித்து அமுக்குவது போன்ற காட்சியில் விவேக் யதார்த்தமாக நடித்திருப்பார். அத்தகைய காட்சிகளில் நடிக்க மறுத்து நடிகர் வடிவேலு விலகியிருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் நடிகர் தனுஷூடன் ஒரு படத்தில் கூட இதுவரை நடிகர் வடிவேலு இணைந்து நடித்ததும் இல்லை. படிக்காதவன் படத்தில் ஒரே ஒரு வாய்ப்பு அமைந்த நிலையில் அதிலும் அவர் நடிக்காமல் விலகியது தமிழ் சினிமா ரசிகர்கள் அறியாத புதிராக உள்ளது.





