- Advertisement -
Homeபொழுதுபோக்குபடத்தில் நடிக்க ஒரு நாள் சம்பளத்தில் இத்தனை லட்சங்கள் கருப்பு பணமாக வாங்குகிறாரா நடிகர்...

படத்தில் நடிக்க ஒரு நாள் சம்பளத்தில் இத்தனை லட்சங்கள் கருப்பு பணமாக வாங்குகிறாரா நடிகர் யோகி பாபு? – அடேங்கப்பா… என அசந்துபோய் வாய் பிளந்த ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்துக்கொண்டு இருப்பவர் நடிகர் யோகிபாபு. துவக்கத்தில் குழு நடிகர்களில் ஒருவராக துணை நடிகராக பல படங்களில் நடித்தவர் யோகி பாபு. பிறகு சில படங்களில் சில காட்சிகளில் நடித்தார். மணிகண்டன் இயக்கிய காக்காமுட்டை படத்தில் ராம்திலக் உடன் இவர் நடித்த காட்சிகள் ரசிகர்களை கவர்ந்ததால், படங்களில் நடிக்கும் வாய்ப்பை அதிகமாக பெற்றார்.

யோகிபாபு நடிக்கும் காட்சிகளில் பெரிய அளவில் சிரிப்பு வரவழைக்காவிட்டாலும் அவரது வித்யாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவரது முகம், தோற்றம், நடை உடை பாவனைகளை பார்த்து ரசிகர்கள் ரசிக்க துவங்கியதால் தொடர்ந்து அவர் பட வாய்ப்புகளை பெற்றார்.

- Advertisement -

ஆனால் மற்ற காமெடி நடிகர்களை போல யோகி பாபு காமெடியை ரசிக்க என்று தனியாக ரசிகர்கள் கூட்டம் கிடையாது. கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சூரி, சந்தானம் போன்றவர்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்போ, அங்கீகாரமோ யோகிபாபுவுக்கு இல்லை என்பதே உண்மை.

ஆனால் ஒரு கட்டத்தில் வடிவேலு நடிப்பதை விட்டு விலகி விட்டார். அதற்கு முன்பே கவுண்டமணி செந்தில் முதுமை காரணமாக படங்களில் நடிப்பது இல்லை. சந்தானம், சூரி இருவரும் படங்களில் ஹீரோக்களாக நடிக்க துவங்கி விட்டதால், இரண்டாம் நிலை காமெடி நடிகர்களே இல்லாத நிலையில், யோகிபாபுவை இயக்குனர்கள், வேறு வழியின்றி தங்களது படங்களில் கமிட் செய்தனர்.

- Advertisement -

இந்த சூழலில் ஒரு படத்தில் நடிக்க நடிகர் யோகிபாபு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இவர் ஒரு நாள் சம்பளமாக தினமும் ரூ. 25 லட்சம் வாங்குகிறார். அதில் ரூ. 5 லட்சம் மட்டுமே சம்பளமாகவும், மீதி 20 லட்சம் ரூபாயை கணக்கில் வராத கருப்பு பணமாகவும் வாங்குகிறார் என்ற தகவலை, மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி இன்று ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும் ஜெ பிஸ்மி கூறுகையில், காமெடி நடிகர் யோகிபாபுக்கு வழங்கப்படும் ஒருநாள் சம்பளம் 25 லட்சம் ரூபாயில், 20 லட்சம் ரூபாய் கருப்பு பணமாக தான் கணக்கில் காட்டாமல் வாங்குகிறார். மீதி 5 லட்சம் மட்டுமே சம்பளத்தில் கணக்கு காட்டுகிறார். இப்படி பல கோடி ரூபாய் சம்பளத்தை கணக்கில் காட்டாமல் கருப்பு பணமாக வாங்கி, அரசாங்கத்தை யோகி பாபு ஏமாற்றி வருகிறார் என்றும் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்