- Advertisement -
Homeபொழுதுபோக்குபட ப்ரோமோஷன்களில் ஏன் நயன்தாரா கலந்துகொள்வதில்லை?.. என்ன விக்னேஷ் சிவன் இதெல்லாம் ஒரு பதிலா

பட ப்ரோமோஷன்களில் ஏன் நயன்தாரா கலந்துகொள்வதில்லை?.. என்ன விக்னேஷ் சிவன் இதெல்லாம் ஒரு பதிலா

- Advertisement -

நடிகை நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இதுவரை 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர் தனது கரியரில் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்திருக்கிறார். பிரச்னை மட்டுமின்றி பல தனிப்பட்ட விமர்சனங்களை ஏற்ற இறக்கங்களையும் அதிகம் சந்தித்த நடிகையாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். இருந்தாலும் அதையெல்லாம் கண்டு துவளாத அவர் தொடர்ந்து கம்பேக் கொடுத்திருக்கிறார்.

இரண்டாவது இன்னிங்ஸில் தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த நயன் அறம், நானும் ரௌடிதான் போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்தார். நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து பல வருடங்கள் லிவிங்கில் இருந்தார். கடந்த வருடம் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.

- Advertisement -

இவர்களுக்கு உயிர், உலக் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும் நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் நயன் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து ஜவான் படத்தின் மூலம் ஹீரோயினாக ஹிந்திக்கு சென்றிருக்கிறார். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்திருக்கிறது. இதன் காரணமாக அவர் பாலிவுட்டிலும் பெரும் ரவுண்டு வர கணக்கு போட்டிருக்கிறார்.

இதற்கிடையே நயன்தாரா தனது படங்களின் ப்ரோமோஷனுக்கு வருவதில்லை என்ற கொள்கையில் கடந்த பல வருடங்களாக உறுதியாக நிற்கிறார். ஜவான் பட ப்ரோமோஷனுக்கு கூட வராத அவர் இன்ஸ்டா கணக்கு தொடங்கி அதில் சில வீடியோக்களை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஆண் நடிகர்களில் எப்படி அஜித்தோ அதேபோல் நடிகைகளில் நயன் விளங்கிக்கொண்டிருக்கிறார்.

- Advertisement -

அதேசமயம் நயன் இப்படி செய்யக்கூடாது. தன்னுடைய ப்ரோமோஷனுக்கு வர வேண்டும் என நீண்ட காலமாகவே ஒருதரப்பினர் குரல் எழுப்புகின்றனர். சூழல் இப்படி இருக்க தன்னுடைய ப்ராடெக்ட்ஸின் ப்ரோமோஷனில் நயன்தாரா கலந்துகொண்டார். இது பலரையும் அதிருப்தியாக்கி தன்னுடைய காசு என்றால் வருகிறார் பிறர் காசு என்றால் வரமாட்டேன் என்கிறார் என எதிர்ப்பு எழ ஆரம்பித்திருக்கின்றன.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இதுகுறித்து கூறுகையில், “தன்னுடைய படங்கள் குறித்து தானே பேசுவதை அவர் விரும்பமாட்டார். படங்கள் சிறப்பாக இருக்க்ம்பட்சத்தில் அதற்கான ப்ரோமோஷனை படமே செய்துகொள்ளும் என்ற கொள்கையில் நயன்தாரா இருக்கிறார். அதனால்தான் அவர் படங்களின் ப்ரோமோஷன்களில் கலந்துகொள்வதில்லை”” என்றார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், ஏங்க விக்னேஷ் சிவன் இதெல்லாம் ஒரு பதிலா. அஜித்தின் பதிலை சுட்டு அப்படியே இங்கே போட்டுருக்கீங்களே என கலாய்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்