- Advertisement -
Homeபொழுதுபோக்குதன்னை பற்றிய சீக்ரட்டை வெளிப்படையாக கூறிய நடிகர் தோனி, ஆனா அதை நடிகர் யோகிபாபு இப்படி...

தன்னை பற்றிய சீக்ரட்டை வெளிப்படையாக கூறிய நடிகர் தோனி, ஆனா அதை நடிகர் யோகிபாபு இப்படி ஓபனா சொல்லிட்டாரே? – கடுப்பான தல ரசிகர்கள்!

- Advertisement -

இந்திய கிரிக்கெட் விளையாட்டில் கீப்பராக இருந்தும் அணியை கேப்டனாக வழி நடத்திய அசகாய சூரர்தான் மகேந்திர சிங் தோனி. எம்எஸ் தோனி என சுருக்கமாக அழைக்கப்படும் இவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தல என்று செல்லப் பெயரும் உள்ளது. சிஎஸ்கே அணியின் கேப்டனாக பல வெற்றிகளை பெற்றும் ரசிகர்களை மகிழ்வித்தவர்.

ஆனால் இந்த முறை நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் ஆட்டம் ஆரம்பம் முதலே படுமோசமாக இருந்தது. குறிப்பாக, வெற்றி பெற வாய்ப்பிருந்த பல முக்கிய ஆட்டங்களில் மோசமான தோல்விகளை தழுவியது. இது சிஎஸ்கே ரசிகர்களை விரக்தியில் தள்ளிய நிலையில், தோனியை கூட கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன் தோனி சொந்தமாக ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். தோனி எண்டர்டெயின்மென்ட் என அந்த நிறுவனத்துக்கு பெயர் வைத்த நிலையில், அந்த நிறுவனம் சார்பில் எல்ஜிஎம் என்ற படத்தை தோனி தயாரித்தார். இந்த படத்தில் நாயகனாக ஹரீஷ் கல்யாண் நடித்தார்.

எல்ஜிஎம் என்பதன் விரிவாக்கம் லெட்ஸ் கெட்ஸ் மேரீட் என்பதாகும். இந்த படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருந்தார். மேலும் முக்கிய கேரக்டரில் காமெடி நடிகர் யோகிபாபுவும் இந்த படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெறவில்லை. அதனால் தோனி மீண்டும் படம் தயாரிப்பில் ஆர்வம் காட்டவில்லை.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் யோகிபாபு கூறியதாவது, எல்ஜிஎம் படத்தின் துவக்க விழாவில் தோனிக்கு அருகில் ஒரு சீட் காலியாக இருந்தது. அப்போது தோனியின் மனைவி சாக்சி என்னை அழைத்து தோனி அருகில் இருக்கும் இருக்கையில் என்னை அமர சொன்னார்.

அப்போது நான் தோனியிடம், சாரி சார் எனக்கு ஆங்கிலம் வராது என்றேன். உடனே அவர், எனக்கும் ஒழுங்காக வராது தான். அதற்காக கவலைப்பட வேண்டாம். நீங்களும் நானும் ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறோம். அதுதான் வேண்டும் என்று கூறினார். தோனி ஒரு அற்புதமான மனிதர் என்று நடிகர் யோகி பாபு கூறியிருக்கிறார். தோனி சொன்ன சீக்ரட் விஷயத்தை இப்படி அம்பலப்படுத்திட்டாரே என தோனி ரசிகர்கள் யோகிபாபு மீது கடுப்பில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்